Automobile Tamilan

ஃபெராரியின் முதல் ஸ்டீரிட் லீகல் SF90 XX சூப்பர் கார் அறிமுகமானது

Ferrari SF90 XX Spider

டிராக்குகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த ஃபெராரியின் XX கார்களை முதன்முறையாக பொது சாலைகளில் பயன்படுத்தக்கூடிய ஃபெராரி SF90 XX ஸ்ட்ராடேல், ஸ்பைடர் என இரு சூப்பர் கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

1995 ஆம் ஆண்டு F50 மாடலுக்குப் பிறகு மோட்டார்ஸ்போர்ட் பாணியை பின்பற்றி நிலையான பின்புற விங்கைக் கொண்ட முதல் ஃபெராரி சாலை கார் மாடலாக குறிப்பிடப்பட்டுள்ளது. XX இரட்டையர்கள் டவுன்ஃபோர்ஸில் பெரிய மேம்பாடுகளை கொண்டுள்ளது.

Ferrari SF90 XX Stradale, SF 90 XX Spider

ஃபெராரி ஸ்போர்ட்டிவ் கார் தயாரிப்பாளரின் முதல் ஸ்ட்ரீட் லீகல் XX கார் மாடலில் இரண்டு விதமாக அறிமுகம் செய்யப்பட்டாலும், ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது. SF90 XX கார் அதிகபட்சமாக 1,030hp பவர், மற்றும் 804Nm டார்க் வழங்குகின்ற 4.0 லிட்டர் V8 ட்வீன் டர்போ சார்ஜ்டு என்ஜினை கொண்டுள்ளது.

SF90 XX கார் 2.3 வினாடிகளில் 100 km/h வேகத்தை அடையும், மற்றும் காரின் டாப் ஸ்பீடு 320 km/h ஆகும்.

SF90 XX ஸ்போர்ட்ஸ் காரின் விலை ஸ்ட்ரடேல் கூபேக்கு €770,000 (தோராயமாக ரூ. 6.90 கோடி) இருந்து தொடங்கி ஸ்பைடர் மாடலின விலை €850,000 (தோராயமாக ரூ. 7.61 கோடி) வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தயாரிக்கப்பட உள்ள 1,398 கார்களும் (799 ஸ்ட்ராடேல், 599 ஸ்பைடர்) விற்றுத் தீர்ந்துவிட்டன என ஃபெராரி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Exit mobile version