Automobile Tamilan

பிஎஸ்6 ஃபோர்டு எண்டோவர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

c9929 ford endeavour bs6

ரூ.29.55 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடபட்டுள்ள புதிய ஃபோர்டு எண்டோவர் எஸ்யூவி பிஎஸ்6 என்ஜின் பெற்றிருப்பதுடன் இந்தியாவின் 10 வேக கியர்பாக்ஸ் பெற்ற ஆட்டோமேட்டிக் காராக விளங்குகின்றது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அறிமுக விலை மே மாதம் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது.

எண்டோவர் எஸ்யூவி காரில் முன்பாக இடம்பெற்று வந்த 3.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் நீக்கப்பட்டு தற்போது புதிய 2.0 லிட்டர் ஈக்கோ ப்ளூ பிஎஸ்6 என்ஜின் பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 170 ஹெச்பி பவர் மற்றும் 420 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 10 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற காராக விளங்குகின்றது.  4×4மற்றும்  4×2 என இரண்டிலும் கிடைக்கின்றது.

எண்டோவரின் 4×2 வேரியண்ட் மைலேஜ் ARAI சான்றிதழ் படி லிட்டருக்கு 13.90 கிமீ ஆகும். அதுவே 4X4 மைலேஜ் லிட்டருக்கு 12.4 கிமீ ஆகும்.

சில்வர், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்க உள்ள இந்த காரில் இப்போது புதிய எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி தோற்ற அமைப்பு, இன்டிரியரில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்பட வில்லை. இப்போது ஃபோர்டு கார்களில் இடம்பெறுகின்ற ஃபோர்டு பாஸ் கனெக்ட்டிவிட்டி ஆப்ஷனும் இணைக்கப்பட்டுள்ளது.

Ford Endeavour BS6 Price

Titanium 4×2 AT – ரூ. 29.55 லட்சம்

Titanium+ 4×2 AT – ரூ. 31.55 லட்சம்

Titanium+ 4×4 AT – ரூ. 33.25 லட்சம்

 

மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே. அதன் பிறகு வேரியண்ட் வாரியாக ரூ.70,000 வரை விலை உயர்த்தப்பட உள்ளது.

 

Exit mobile version