Automobile Tamilan

இந்தியாவில் மீண்டும் போர்டு கார் விற்பனைக்கு அறிமுகம் ?

ford india

அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய சந்தையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த நிலையில் தனது ஆலைகளை விற்பனை செய்ய முடிவு செய்த நிலையில் சென்னை ஆலைக்கு ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே, குஜராத் சனந்த பகுதியில் உள்ள ஆலையை டாடா மோட்டார்ஸ்  கையகப்படுத்தியது.

Ford India

சமீபத்தில் ஜேஎஸ்டபிள்யூ குழுமம் சீனாவின் SAIC குழுமத்தின் எம்ஜி மோட்டார் இந்தியாவில் முதலீட்டை மேற்கொள்ள உள்ள நிலையில் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளது.

ஜேஎஸ்டபிள்யூ மட்டுமல்லாமால் மஹிந்திரா மற்றும் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. எனவே, ஆலை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டுள்ளதால் மீண்டும் இந்திய சந்தையில் ஃபோர்டு தனது கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சந்தையில் மீண்டும் ஃபோர்டு கார் விற்பனையை துவங்கினால் அனேகமாக எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உதவி – https://timesofindia.indiatimes.com/

Exit mobile version