ஃபோர்டு மாச் 1 எலெக்ட்ரிக் எஸ்யூவி படங்கள் வெளியானது

ஃபோர்டு நிறுவனத்தின் முதல் முழுமையான எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த காரின் டிசைன், ஃபோர்டு நிறுவனத்தின் பழம்பெரும் ஃபோர்டு முஸ்டாங் காரை போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று ரியர் லைட்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது. முழுமையான புதிய டிசைனில் இந்த மாச் 1 கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை சர்வதேச மார்கெட்டுக்காக வடிவமைத்துள்ளதாக தெரிவித்துள்ள ஃபோர்டு நிறுவனம், புதிய C2 பிளாட்பார்மில் இந்த கார்களை மேம்படுத்தியுள்ளது. இந்த பிளாட்பாரம் மிகவும் வலிந்து கொடுக்க கூடியதாக இருக்கும்.

புதிய மாச் 1 கார்களின் கோடு-பெயர்களாக CX430 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கார்கள், 500 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் என்று ஃபோர்டு நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்த கார்கள் வரும் 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்பபட்டு, வரும் 2020ல் விற்பனைக்கு வர உள்ளது.

Exit mobile version