ஹோண்டா பிரியோ காரும் இந்தியாவில் நிறுத்தப்படுகின்றது

தொடக்கநிலை சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா பிரியோ காருக்கு இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளது. ஆனால் அமேஸ் செடான் ரக மாடல் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார் பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற பிரியோ காருக்கு போதிய வரவேற்பின்மை காரணமாக இந்தியாவில் இந்த காரின் என்ஜின் தொடர்பான விபரங்களை பிஎஸ் 6 விதிமுறை சூழலுக்கு மாற்றுவதற்கான வாய்ப்பில்லை.

கடந்த 2011ல் அறிமுகம் செய்யப்பட்ட பிரியோ காரின் விற்பனை இதுவரை 97,000 கார்கள் விற்பனையாகி உள்ளது. அமேஸ் மற்றும் ஜாஸ், WR-V உள்ளிட்ட கார்களை தொடக்க சந்தையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிவித்தது போல ஹோண்டா நிறுவனம் 6 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிஆர்-வி உள்ளிட்ட மாடல்கள் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பிரியோ உற்பத்தி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து புதிய பிரியோ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது.

Exit mobile version