Automobile Tamilan

ஹோண்டா எலிவேட்டில் ADV எடிசனின் வசதிகள் மற்றும் விலை விவரம்

honda elevate adv edition

ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் பிரசத்தி பெற்ற எலிவேட் எஸ்யூவிக்கு தொடர்ந்து பல்வேறு சிறிய மாறுதல்கள் மற்றும் கூடுதல் ஆக்செரீஸ் சார்ந்த ஸ்டைலிங் மேம்பாடுகளை வழங்கி வரும் இந்நிறுவனம் எலிவேட் ADV எடிசன் என்ற பெயரில் ரூ.15,29,000 முதல் ரூ.16,66,800 வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணயம் செய்துள்ளது.

ஹோண்டா Elevate ADV எடிசன் சிறப்புகள் என்ன ?

குறிப்பாக ஆரஞ்ச் நிறத்தை விரும்புவோவருக்கு ஏற்ற தேர்வாக அமைந்து ஸ்போர்ட்டிவ் லைஃப்ஸ்டைல் விரும்பிகளுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்த ஆக்செரீஸ் அனைத்தும் டீலர்களில் பொருத்தி தரப்பட உள்ள நிலையில் கூடுதலாக 360 டிகிரி கேமரா ஆப்ஷனல் ஆக்செரீஸ் முறையிலும் கிடைக்க உள்ளது.

சமீபத்தில் வெளியான ஆல்ஃபா போல்டு பிளஸ் கிரிலுடன் கருமை நிறத்தை பெற்று பரவலாக பல்வேறு இடங்களில் ADV பேட்ஜிங் மற்றும் ஆரஞ்ச் நிற இன்ஷரகள் அல்லது ஸ்டிக்கரிங்காரில் இடம்பெற்றுள்ளது.  கருமை நிற அலாய் வீல், பின்புற பம்பர் உள்ளிட்ட சில இடங்களிலும் ஆரஞ்ச் உள்ளது.

இன்டீரியரிலும் கருமை நிறத்துக்கு முக்கியத்துவத்துடன் அதே போல பல்வேறு இடங்களில் ஆரஞ்ச் நிற ஸ்டிச்சிங் மற்றும் டிடெய்லிங், ADV லோகோ மற்றும் சில இன்ஷர்கள், ஆம்பியன்ட் லைட்டிங் போன்றவை இடம்பெற்றுள்ளது.

என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கமான 1.5 லிட்டர், 4 சிலிண்டர் i-VTEC பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 121hp மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் 6 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.

(எக்ஸ்-ஷோரூம்)

Exit mobile version