ஜூன் 6.., ஹோண்டா எலிவேட் எஸ்யூவி அறிமுகம்

வரும் ஜூன் 6 ஆம் தேதி புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் கிரெட்டா உள்ளிட்ட C-பிரிவு எஸ்யூவி கார்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்த உள்ளது.

அறிமுகத்தை தொடர்ந்து விற்பனைக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

Honda Elevate SUV

4.2-4.3 மீட்டர் நீளத்துக்குள் வரவுள்ள எலிவேட் எஸ்யூவி மாடல் 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர், NA பெட்ரோல் என்ஜின் பவர் மற்றும் டார்க் தொடர்பான விபரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த என்ஜின் சிட்டி காரில் 121hp மற்றும் 145Nm டார்க் உற்பத்தி செய்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற BR-V மற்றும் HR-V போன்ற எஸ்யூவி கார்களின் தோற்ற உந்துதலை பெற்று எல்இடி ஹெட்லைட், அகலமான முரடத்தனத்தை வெளிப்படும் வகையிலான பம்பர், உயரமான வீல் ஆர்சு பெற்றுள்ளது.

இன்டிரியர் அம்சங்களில் சிட்டி காரில் உள்ள பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கலாம்.  10.2 அங்குல ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ADAS ஆகிய தொகுப்பு பெற்றிருக்கும்.

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர், வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் ஆகிய மாடலை ஹோண்டா எலிவேட் எஸ்யூவி எதிர்கொள்ள உள்ளது.

This post was last modified on May 3, 2023 8:48 AM

Share