Automobile Tamilan

அல்கசாரில் நைட் எடிசனை வெளியிட்ட ஹூண்டாய் இந்தியா

ஹூண்டாய் alcazar நைட் எடிசன்

ஹூண்டாய் நிறுவனத்தின் பண்டிகை காலத்தை முன்னிட்டு அல்கசாரிலும் கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நைட் எடிசன் விற்பனைக்கு ரூ.21.66 லட்சத்தில் (டீசல் மற்றும் பெட்ரோல் ஒரே எக்ஸ்-ஷோரூம் விலை) 7 இருக்கை பெற்ற Signature வேரியண்டின் அடிப்படையில் வெளியானது.

ஆட்டோமேட்டிக் டீசல் மற்றும் டிசிடி பெட்ரோல் என இரு ஆப்ஷனிலும் கிடைக்கின்ற 1.5 லிட்டர் டீசல் 116hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்துவதுடன், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல்  160hp பவர் 253Nm டார்க் வழங்குகின்றது.

வழக்கம் போல மற்ற நைட் எடிசைன போல இந்த ஹூண்டாய் அல்கசார் காரிலும் வெளிப்புறத்தில் மேட் கருமை நிற ஹூண்டாயின் லோகோ உட்பட அனைத்திலும் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கருப்பு அலாய் வீல், சிவப்பு பிரேக் காலிப்பர், கருப்பு நிற முன், பின்புற ஸ்கிட் பிளேட்டு, கருப்பு ORVMS மற்றும் பக்கவாட்டில் சில் கார்னிஷ், மற்றும் நைட் லோகோ உள்ளது. இன்டீரியரில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பிராஸ் நிற இன்ஷர்ட்கள் உள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் ஐ20, ஐ20 என்-லைன், க்ரெட்டா எலக்ட்ரிக் ஆகியவற்றில் நைட் எடிசனை வெளியிட்டுள்ள நிலையில் வசதிகளில் அல்கசார் சிக்னேச்சர் வேரியண்டில் டேஸ்கேம் மற்றும் மேட் கருப்பு நிறத்தை பெற்றுள்ளது.

Exit mobile version