Automobile Tamilan

புதிய ஹூண்டாய் ஆரா செடானின் சோதனை ஓட்டம் துவங்கியது

hyundai aura

முந்தைய எக்ஸ்சென்ட் காரின் புதிய பெயரான ஹூண்டாய் ஆரா விற்பனையில் கிடைத்து வரும் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் உந்துதலை கொண்டதாக தயாரிக்கப்பட்டு அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்பே சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆரா காரின் முழுமையான உற்பத்தி நிலை மாடல் நாடு முழுவதுமான சோதனை ஓட்டத்திற்கு தயாராகியுள்ளது.

முன்பாக விற்பனைக்கு வெளியிடப்பட்டு கிடைத்து வரும் புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் முன்புற தோற்ற உந்துதலை பெற்று சற்று குறைவான மாற்றங்களை மட்டும் புதிய ஆரா கார் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. மற்றபடி கூடுதலாக இணைக்கப்பட்ட பூட் பகுதியில் அமைந்துள்ள பம்பரில் சிறிய மாற்றங்கள் இருக்கும்.

இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை, தொடர்ந்து ஐ10 நியோஸ் போன்றே அமைந்திருப்பதுடன் டாப் வேரியண்டுகளில் 8.0 அங்குல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆப்பிள் கார் ப்ளே , ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வதிகளுடன் கூடிய பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் ப்ளூலிங்க் டெக்னாலாஜி பெற வாய்ப்புள்ளது.

பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் இடம்பெற உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் 82 பிஹெச்பி மற்றும் 114 என்எம் டார்க்கை வழங்குகின்றது. மேலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் 5 வேக ஏஎம்டி ஆப்ஷனும் பெற்றுள்ளது. 1.2 லிட்டர் டீசல் 74 பிஹெச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. டீசலும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் கிடைக்கும்.

அடுத்த, சில மாதங்களில் புதிய ஹூண்டாய் ஆரா கார் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Exit mobile version