Automobile Tamilan

ஹூண்டாய் CRATER ஆஃப்ரோடு கான்செப்ட் வாகனத்தை அறிமுகப்படுத்தியது

hyundai crater offroad suv

ஆட்டோமொபைல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த மோட்டார் கண்காட்சியான ஆட்டோ மொபிலிட்டி லாஸ் ஏஞ்சல்ஸ் 2025 அரங்கில் பார்வைக்கு வரவுள்ள, ஹூண்டாய் மோட்டார்ஸ் அமெரிக்காவின் புதிய ‘CRATER Concept’  ஆஃப் ரோடு பயன்பாட்டிற்கான கான்செப்ட் நிலை மாடலை உலகளவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள டிசைன் அமைப்பு மிக எதிர்கால வாகனங்களுக்கான பின்புலத்தை தழுவியதாகவும், முரட்டுத்தனமாக ஆஃப் ரோடு பயனங்களுக்கு ஏற்றதாகவும் விளங்கும் நிலையில், ஏற்கனவே ஹூண்டாய் இந்தியா திட்டமிடுள்ள ஆஃப் ரோடு மாடல் இந்த டிசைனை தழுவியதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 ஹூண்டாய் CRATER Concept

இந்நிறுவனத்தின் XRT ஆஃப் ரோடு மாடல்களுக்கான தாத்பரியத்தை பின்பற்றி புதிய மற்றும் மிகவும் ஆக்ரோஷமான வடிவமைப்பு மொழியைக் கொண்டுள்ளது. இது உறுதியான மற்றும் சக்திவாய்ந்த தோற்றத்துடன், சவாலான பயணங்களுக்கு ஏற்ற வகையிலான கட்டமைப்புடன் விளங்குகின்றது.

மோனோகோக் வடிவமைப்பினை தழுவியதாக வந்துள்ள க்ரேட்டர் காரினை எந்த இடத்திற்கும் எடுத்துச் செல்லும் வகையிலான 19 அங்குல வீல் மற்றும் 33 அங்குல டயர் போன்றவை கான்செப்ட் நிலையில் வழங்கப்பட்டுள்ளது.

மிக நேர்த்தியான எல்இடி விளக்குகள், மேற்கூறையில் விளக்குகள் என பலவும் மிகவும் கவனத்தை ஈர்ப்பதுடன் க்ரேட்டர் கான்செப்ட்டின் பச்சை தங்க மேட் வெளிப்புற வண்ணம் கலிபோர்னியாவின் கடலோர நிலப்பரப்பிலிருந்து பெறப்பட்டதை போன்றும், இன்டீரியரில் மிக சிறப்பான டெக் சார்ந்த வடிவமைப்புகளை கொண்டிருக்கின்றது.

BYOD (Bring Your Own Device) என்ற முறையை தழுவியதாக அமைந்துள்ளது. தற்பொழுது கான்செப்ட் நிலையில் உள்ள இந்த மாடல் எப்பொழுது உற்பத்தி நிலை ஆக விற்பனைக்கு வரும் போன்ற எந்த தகவலும் தற்பொழுது இல்லை.

புதிய CRATER கான்செப்ட் மூலமாக ஆட்டோமொபைல் சந்தையில் சாகச மற்றும் ஆஃப்-ரோடு பிரிவில் ஹூண்டாயின் கவனத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

Exit mobile version