Categories: Car News

ஹூண்டாய் க்ரெட்டா காரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுடன் E+, EX வேரியண்டுகள் அறிமுகம்

creta

விற்பனைக்கு வந்துள்ள தொடக்கநிலை E+, EX என இரண்டு ஹூண்டாய் க்ரெட்டா வேரியண்டில் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. ஹூண்டாய் க்ரெட்டாவின் 1.6 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் 4,000 ஆர்பிஎம்-மில் 126 பிஹெச்பி பவரை வழங்குவதுடன் மற்றும் 1,500-3,000 ஆர்பிஎம்-மில் 260 என்எம் டார்க் உருவாக்குகிறது. இந்த எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் E +, EX, SX டூயல் டோன் மற்றும் SX (O) ட்ரீம்களுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் SX வகையில் மட்டுமே வழங்கப்படுகிறது.

தொடக்கநிலை க்ரெட்டா E+ கருப்பு உடன் சில்வர் கிரில், பாடி வண்ண கதவு கைப்பிடிகள் மற்றும் ORVM, ஸ்டீல் வீல், டூயல் டோன் பம்பர் மற்றும் சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள் அடிப்படை அம்சங்களுடன் வந்துள்ளது. எல்இடி டர்ன் சிக்னல்கள், ஃபாலோ-மீ-ஹோம் ஹெட்லேம்ப்ஸ், ஏசி, முன் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் உயரத்தை சரிசெய்யக்கூடிய  இருக்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மின்சார டெயில்கேட் வசதி, பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் டில்ட் ஸ்டீயரிங் பெற்றுள்ளது.

பாதுகாப்பினை பொருத்தவரை இரட்டை முன் ஏர்பேக்குகள், ஈபிடியுடன் ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள், பகல் / இரவு ஐஆர்விஎம், சீட் பெல்ட் ரிமைண்டர், முன் சீட் பெல்ட் ப்ரெடென்ஷனர்கள் மற்றும் அதிவேக எச்சரிக்கை வசதிகள் உள்ளது.

E + வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக, எல்இடி டிஆர்எல், பின்புற சென்டர் ஆர்ம்ரெஸ்ட், முன் யூஎஸ்பி சார்ஜர், மேப் லைட் மற்றும் சன்கிளாஸ் ஹோல்டர், உயரத்தை சரிசெய்யக்கூடிய இருக்கை மற்றும் சரிசெய்யக்கூடிய முன் மற்றும் பின்புற ஹெட்ரெஸ்ட்கள் பெற்றுள்ளது. இந்த வேரியண்டில் 5.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தையும் ப்ளூடூத் இணைப்பு, மல்டி ஆப்ஷன் ஸ்டீயரிங் மற்றும் ஹூண்டாய் ஐ-ப்ளூ ஆடியோ ரிமோட் ஆப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா 1.6 லிட்டர் E+ – ரூ.10.88 லட்சம்

ஹூண்டாய் க்ரெட்டா 1.6 லிட்டர் EX – ரூ. 11.92 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

 

 

Recent Posts

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…

1 day ago

சென்னையில் ஃபோர்டு கார்களை தயாரிக்க ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி..?

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…

1 day ago

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…

1 day ago

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…

1 day ago

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…

2 days ago

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…

2 days ago