Automobile Tamilan

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி முக்கிய சிறப்புகள்.!

க்ரெட்டா எலெக்ட்ரிக்

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூபாய் 17.99 லட்சம் முதல் ரூபாய் 23.50 லட்சம் வரை கிடைக்கின்ற நிலையில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டு போட்டியாளர்கள் யார் மற்றும் என்னென்ன சிறப்புகள் இருக்கின்றது போன்ற முக்கிய விபரங்களை தற்பொழுது சுருக்கமாகவும் அதே நேரத்தில் பல தகவல்களையும் அறிந்து கொள்ளப் போகின்றோம்.

ஏற்கனவே, முன்பதிவு கட்டணம் ரூ.25,000 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது டீலர்களுக்கு ஏற்கனவே இந்த மாடல் டெலிவரி வழங்கப்படத் தொடங்கி உள்ளதால் விரைவில் டீலர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி வழங்கப்பட உள்ளது.

Creta Electric Battery and Range

42kwh மற்றும் 51.4kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை கொண்டிருக்கின்ற இந்த மாடலானது மிக அடிப்படையாகவே தற்பொழுது விற்பனையில் இருக்கின்ற ICE காரின் அடிப்படை வடிவமைப்பினை தக்க வைத்துக்கொண்டு சிறிய அளவிலான மாறுதல் மட்டுமே செய்யப்பட்டு இயல்பாகவே க்ரெட்டா டிசைன் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.

42 kWh பேட்டரி மாடல் 99 kW (135 PS) மற்றும்  வெளிப்படுத்துகின்ற நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில்  390 கிமீ ரேஞ்ச் தரவல்லதாகும். அடுத்து,  51.4 kWh பேட்டரி கொண்ட டாப் மாடல் அதிகபட்சமாக 126 kW (171 PS) பவர் வெளிப்படுத்துவதுடன் முழுமையான சார்ஜில் 473 கிமீ வழங்கும் என ARAI உறுதிப்படுத்தியுள்ளது.

இரண்டு மாடல்களிலும் பொதுவாக 50Kw DC சார்ஜரை பயன்படுத்தினால் 10-80 % ஏறுவதற்கு வெறும் 58 நிமிடங்கள் போதுமானது, அதுவே, வீட்டில் பொருத்திக் கொள்ளுகின்ற 11Kw AC சார்ஜரை 10-100% பெற பயன்படுத்தினால் 42Kwh பேட்டரி 4 மணி நேரமும், டாப் மாடல் 4.50 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என இந்நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் க்ரெட்டா போட்டியாளர்கள்

க்ரெட்டா எலக்ட்ரிக் மாடலுக்கு போட்டியாக சந்தையில் உள்ள மஹிந்திரா BE 6, டாடா கர்வ் இவி, எம்ஜி இசட்எஸ் இவி வரவிருக்கும் மாருதி சுசூகி இ விட்டாரா, டொயோட்டா அர்பன் இவி ஆகியவற்றுடன் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களான 15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் விலையில் உள்ள கார்களை எதிர்கொள்ளுகின்றது.

கிரெட்டா இவி பாதுகாப்பு அம்சங்கள்

அடிப்படையாகவே பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 6 ஏர்பேக்குகள், அனைத்து வீலிலும் டிஸ்க் பிரேக்குகள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் (HDC), வாகன நிலைப்புத்தன்மை மேலாண்மை (VSM) உடன் மின்னணு நிலைப்புத்தன்மை கட்டுப்பாடு (ESC) , குழந்தை இருக்கை நங்கூரம் (ISOFIX), டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு போன்றவை உள்ளது.

டாப் வேரியண்டில் லெவல் 2 ADAS மூலம் பெறப்படும் வசதிகளில் 19 விதமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

Creta Electric Price list

க்ரெட்டா இவி மாடலின் விலை ரூ.17.99 லட்சத்தில் துவங்கும் நிலையில் சுமார் 10 விதமான நிறங்களை பெற்று இரண்டு டாப் வேரியண்டில் மட்டும் 51.4Kwh பேட்டரி உள்ளது.

க்ரெட்டா எலெக்ட்ரிக் விலை (ex-showroom)
Variant Price
Executive Rs 17,99,000
Smart Rs 18,99,900
Smart (O) Rs 19,49,900
Premium Rs 19,99,900
Smart (O) 51.4Kwh LR Rs 21,49,900
Excellence 51.4Kwh LR Rs 23,49,900

 

இதில் Smart (O), Premium மற்றும் Excellence என மூன்று வகைக்கும் 11kW AC வால் சார்ஜர் மற்றும் பொருத்துவதற்கான கட்டணத்தை சேரத்து ரூ.73,000 வசூலிக்கப்பட உள்ளது.

Exit mobile version