ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி ஸ்பை படம் வெளியானது

creta ev spied

ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் கிரெட்டா எஸ்யூவி காரின் அடிப்படையில் எலக்ட்ரிக் மாடல் சோதனை ஓட்டம் இந்தியா உட்பட தென்கொரியாவிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இறுதிகட்ட வடிவமைப்பினை பெற்றுள்ள கிரெட்டா இவி மாடல் 2024 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம்.

Hyundai Creta EV

ICE மாடலின் தோற்ற அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முகப்பினை பெற உள்ள கிரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் எல்இடி ஹெட்லைட் உட்பட ஸ்டைலிஷான முன்புற பம்பரை கொண்டுள்ளது.

விற்பனையில் உள்ள ஐயோனிக் 5 இவி மாடலை போல இன்டிரியர் பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக பல்வேறு நவீனத்துமான வசதிகளாக முன்பக்க கேமரா, 360 டிகிரி கேமரா மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பு பெற உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 50-70KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 450 முதல் 500 கிமீ ரேஞ்சு வழங்கும் வகையில் வரக்கூடும். இந்த மாடலுக்கு போட்டியாக வரவிருக்கும் டாடா கர்வ் EV, டாடா ஹாரியர் EV, மாருதி சுசூகி eVX, கியா செல்டோஸ் EV மற்றும் எம்ஜி ZS EV ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் ரூ.18 லட்சம் விலைக்குள் துவங்கும் வாய்ப்புகள் உள்ளது.