Automobile Tamilan

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்ரேட் எடிஷன் விற்பனைக்கு வந்தது

b4451 hyundai grand i10 nios

ஹூண்டாயின் பிரசத்தி பெற்ற கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் அடிப்படையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு கார்ப்ரேட் எடிஷன் என்ற பெயரில் கூடுதலான பல்வேறு வசதிகளை பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு எடிசனின் விலை ரூ.6.11-ரூ.7.19 லட்சம் வரையில் கிடைக்க துவங்கியுள்ளது.

விற்பனையில் கிடைக்கின்ற மேக்னா வேரியண்டின் அடிப்படையில் கூடுதலான வசதிகளாக 6.7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே (இந்த வேரியண்டில் 2டின் ஆடியோ சிஸ்டம் மட்டும் கொடுக்கப்படும்) உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. 15 அங்குல கன்மெட்டல் நிறத்திலான ஸ்டீல் வீல் அலாய் வீல் போன்ற காட்சி அமைப்புடன் கொடுக்கப்பட்டு, எலக்ட்ரிக் ஆட்டோ ஃபோல்டிங் ORVM கொடுக்கப்பட்டுள்ளது. புதிதாக தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப வைரஸ் கிருமிகளை தடுக்கும் திறனுடன் சுத்தமான காற்றினை வழங்கும் வகையிலான HEPA ஃபில்டர் இணைக்கப்பட்டுள்ளது.

கிராண்ட் ஐ 10 நியோஸ் மாடலில் பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் 82 பிஹெச்பி மற்றும் 114 என்எம் டார்க்கை வழங்குகின்றது. மேலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் 5 வேக ஏஎம்டி ஆப்ஷனும் பெற்றுள்ளது.

1.2 லிட்டர் டீசல் 74 பிஹெச்பி பவர் மற்றும் 190 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. டீசலும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷன் கிடைக்கிறது.

கிராண்ட் ஐ10 நியோஸ் பெட்ரோல் – ரூ.6.19 லட்சம்

கிராண்ட் ஐ10 நியோஸ் பெட்ரோல் ஏஎம்டி – ரூ.6.64 லட்சம்

கிராண்ட் ஐ10 நியோஸ் டீசல் – ரூ.7.19 லட்சம்

சாதாரன வேரியண்டை விட ரூ.19,000 கூடுதலாக அமைந்துள்ளது. மற்றபடி, பண்டிகை காலத்தை முன்னிட்டு கிராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு ரூ.35,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றது.

Exit mobile version