Car News

சென்னையில் முதல் 180 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தை நிறுவிய ஹூண்டாய்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா முதல் 180 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஸ்பென்சர் பிளாசா மாலில் துவங்கியுள்ளது.

150kw DC + 30KW DC என இரண்டு சார்ஜிங் ஸ்லாட் பெற்றுள்ள புதிய மையம் தவிர முன்பே ஹூண்டாய் அறிவித்தப்படி, தமிழ்நாட்டில் 100 இடங்களில் 180 kW DC விரைவு சார்ஜிங் மற்றும் 85 ஒற்றை வேகமான சார்ஜிங் நிலையங்கள் (DC 60 KW)  மையங்களை திறப்பதாக அறிவித்திருந்த நிலையில் முதல் நிலையத்தினை திறந்துள்ளது. இந்த விரைவு சார்ஜிங் மையத்தில் ஹூண்டாய் மட்டுமல்லாமல் அனைத்து எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களை சார்ஜ் செய்ய பொது சார்ஜிங் நிலையத்தைப் பயன்படுத்தலாம்.

HMIL நிறுவனத்தின் 28வது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் ‘மனிதகுலத்திற்கான முன்னேற்றம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப, எங்களின் முதல் 180 kW வேகமான பொது சார்ஜிங் நிலையத்தை திறப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும்,  ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு நாங்கள் எங்கள் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டிற்கு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம், என HMIL , கார்ப்பரேட் பிளானிங் நிர்வாக இயக்குனர் திரு. ஜே வான் ரியூ தெரிவித்துள்ளார்.

அனைத்து எலக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களும் HMIL பொது 180 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன் மூலம் விரைவான சார்ஜிங் அனுபவத்தை பெற்று பயனடைவார்கள். EV உரிமையாளர்கள் myHyundai செயலி மூலம் ஹூண்டாய் சார்ஜர் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தில் சார்ஜிங் வசதியை அணுகலாம்,

இருப்பிடம், நேவிகேஷன் மற்றும் சார்ஜிங் ஸ்லாட்டுகளை முன்பதிவு செய்தல், டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ரிமோட் சார்ஜிங் நிலையைக் கண்காணித்தல் என அனைத்தையும் ஃபாஸ்ட் பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷனைத் தவிர, தமிழ்நாட்டில் தற்போது உள்ள 170க்கும் மேற்பட்ட சார்ஜிங் பாயிண்ட்கள் வாடிக்கையாளர் வசதிக்காக myHyundai ஆப் மூலம்  “EV சார்ஜ்” பிரிவில்  சேர்க்கப்பட்டுள்ளது.  இந்த ஆப்ஸ் திறந்திருக்கும் மற்றும் அனைத்து ஹூண்டாய் மற்றும் ஹூண்டாய் அல்லாத EV பயனர்களுக்கும் அணுகக்கூடிய வகையில் தரபட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் கோனா EV, ஐயோனிக் 5 என இரு எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதத்தில் கிரெட்டா இவி வெளியாக உள்ளது.

Share
Published by
BHP Raja