Automobile Tamilan

கோனா எலக்ட்ரிக் எஸ்யூவியை நீக்கிய ஹூண்டாய் இந்தியா

hyundai kona ev

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி காராக இந்தியாவில் வெளியிடப்பட்டிருந்த கோனா எலக்ட்ரிக் ஆனது இந்திய சந்தையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றது. இணையதளத்தில் தற்பொழுது இந்த பக்கம் நீக்கப்பட்டது. குறிப்பாக இந்த காரணங்கள் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது புதிய வரவேற்பின்மை மற்றும் தொடர்ந்து அதிகப்படியான ஆஃபர்கள் ஆனது இந்த எலக்ட்ரிக் காருக்கு வழங்கப்பட்டாலும் கூட பெரிய அளவிலான ஈர்ப்பினை இந்திய சந்தையில் இந்த மாடல் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.

2019 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் வெளியிடப்பட்ட கோனா எலக்ட்ரிக் தொடர்ந்து எந்தவொரு மேம்பாடும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையிலும், மிகக் குறைவான விற்பனை எண்ணிக்கையை மட்டும் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில்  கிடைத்த 39.2 கிலோவாட் கொண்ட பேட்டரி பெற்ற கோனா காரின் சிங்கிள் சார்ஜ் மைலேஜ் அதிகபட்சமாக 452 கிமீ பயணிக்க உதவுவதுடன் 133bhp பவரை வெளிப்படுத்துவதுடன் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.3 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  39.2kWh பேட்டரி கொண்ட மாடலின் முழுமையான சார்ஜ் செய்ய 6 மணி நேரம் போதுமானதாகும். கடந்த 5 ஆண்டுகளில் 2,500க்கு குறைந்த எண்ணிக்கையில் மட்டும் விற்பனை ஆகியுள்ளது.

அடுத்த ஆண்டின் துவக்க மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹூண்டாய் கிரெட்டா EV விற்பனைக்கு வரவுள்ளது. ரூ.20 லட்சத்துக்குள் விலை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version