Automobile Tamilan

ரூ.5.17 லட்சத்தில் விற்பனைக்கு வெளியான ஹூண்டாய் சான்ட்ரோ சிறப்பு பதிப்பு

00e60 hyundai santro anniversary edition 1

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், பண்டிகை காலம் மற்றும் சான்ட்ரோ அறிமுகம் செய்து முதல் வருடத்தை முன்னிட்டு சிறப்பு பதிப்பினை விற்பனைக்கு வெளியிட்டுள்ள மாடல் ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் அடிப்படையில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் என இரண்டிலும் கிடைக்கின்றது.

சான்ட்ரோ காரில் பொருத்தப்பட்டுள்ள 1.1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிஎன்ஜி மாடல் எஞ்சின் அதிகபட்சமாக 58 பிஎச்பி பவரையும், 84 என்எம் டார்க் திறனையும் வழங்குகின்றது.

ஆண்டுவிழா பதிப்பில் காணக்கூடிய சில தோற்ற மாற்றங்களில் குறிப்பாக ரூஃப் ரெயில்கள், ORVM மற்றும் கதவு கைப்பிடிகள் ஆகியவற்றில் பளபளப்பான கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. அதே நேரத்தில் சக்கர கவர்கள் அடர் சாம்பல் நிறத்துடன் மற்றும் ஆண்டு பதிப்பு பேட்ஜிங் ஆகியவற்றுடன்  போலார் ஒயிட் மற்றும் அக்வா டீயல் என இரு நிறங்களில் கிடைக்கின்றது.

விலையைப் பொறுத்தவரை, ஹூண்டாய் சான்ட்ரோ ஆண்டுவிழா பதிப்பின் எம்.டி மாடல் ரூ.5.17 லட்சம் மற்றும் ஏஎம்டி பதிப்பிற்கு  ரூ.5.75 லட்சம் என நிர்ணயித்துள்ளது. சாதாரன  ஸ்போர்ட்ஸ் வேரியண்டை விட ரூ.10,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் சான்ட்ரோ காரை நேரடியாக டாடா டியாகோ, மாருதி சுசுகி வேகன் ஆர் மற்றும் செலிரியோ உள்ளிட்ட மாடல்கள் எதிர்கொள்கின்றன.

Exit mobile version