Automobile Tamilan

ஹூண்டாய் வென்யூ காரில் ஐ.எம்.டி விற்பனைக்கு வெளியானது

584c7 hyundai venue sports imt

சமீபத்தில் ஹூண்டாய் அறிமுகப்படுத்திய ஐ.எம்.டி எனப்படுகின்ற இன்டெலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பெற்ற வென்யூ எஸ்யூவி மாடல் ரூ.9.99 லட்சம் முதல் ரூ.11.08 லட்சம் வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர கூடுதலாக ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ரூ.10.20 லட்சம் முதல் ரூ.11.52 லட்சம் வரை வெளியிடப்பட்டுள்ளது.

ஹூண்டாய் ஐஎம்டி என்றால் என்ன ?

ஹூண்டாய் ஐஎம்டி எனப்படும் நுட்பம் வழக்கம் போலவே ‘H’ வடிவில் கியர் பேட்டர்ன் மேனுவல் மாடலை போன்றே அமைந்திருக்கும். ஆனால் கிளட்ச் பெடல் தானாகவே உள்ளுக்குள் டிரைவரின் உதவியில்லாமல் இயங்கிக் கொள்ளும்.

ஹூண்டாய் நிறுவனத்தால் Transmission Gear Shift என அழைக்கப்படுகின்ற நுட்பத்தில் கியர் லிவர் மேல் ஓட்டுநர் கை வைத்த நொடியே இதில் பொருத்தப்பட்டுள்ள Intention Sensor மூலமாக சிக்னல் டிரான்ஸ்மிஷன் கட்டுப்பாடு மையத்திற்கு கியர் மாற்றப்படும் வாய்ப்புள்ளதை உணர்ந்து hydraulic actuator மூலமாக தானாக கிளட்ச்சை இயக்கி, கியரை மாற்ற உதவும். இதற்கு Concentric Slave Cylinder (CSC) எனப்படுவது கொடுக்கப்பட்டு கிளட்சினை என்கேஜ் மற்றும் டிஸ்என்கேஜ் செய்ய உதவுகின்றது. இந்த நுட்பம் நெரிசல் உள்ள போக்குவரத்து சாலைகளில் ஓட்டுநரின் பளுவை பெருமளவு குறைக்கும்.

ஹூண்டாய் வென்யூ ஐ.எம்.டி வேரியண்ட்

120 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக இப்போது 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் பெற்றதாக வந்துள்ளது.

வென்யூ iMT SX ரூ.9.99 லட்சம்

வென்யூ iMT SX+ ரூ.11.08 லட்சம்

ஹூண்டாய் வென்யூ ஸ்போர்ட் வேரியண்ட்

SX, SX(O), மற்றும் SX+ என மூன்று விதமான வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஸ்போர்ட் வேரியண்ட் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வழங்குகின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது.

வென்யூ ஸ்போர்ட் மாடலின் தோற்ற அமைப்பில் டூயல் டோன் கலர், கிளாஸ் கருப்பு நிற கிரிலுடன் சிவப்பு கலவை, சிவப்பு நிற பிரேக் காலிப்பர், மற்றும் சிவப்பு நிற அசென்ட்ஸ் கொண்டுள்ளது. அடுத்தப்படியாக, இன்டிரியரில் புதிய ஸ்டியரிங் வீல் மற்றும் சிவப்பு நிறத்தில் பெரும்பாலான அசென்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக மற்றொரு 5 வேக மேனுவல் பெற்ற 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் என்ஜினில் S+ வேரியண்ட் கொடுக்கப்பட்டு ரூ.8.32 லட்சத்தில் வழங்கப்பட்டுள்ளது.

வென்யூ ஸ்போர்ட் iMT பெட்ரோல் SX – ரூ.10,20,360

வென்யூ ஸ்போர்ட் iMT பெட்ரோல் SX (O) – ரூ.11,20,400

வென்யூ ஸ்போர்ட் 7DCT பெட்ரோல் SX – ரூ.11,58,400

வென்யூ ஸ்போர்ட் MT டீசல் SX – ரூ.10,30,700

வென்யூ ஸ்போர்ட் MT டீசல் SX (O) – ரூ.11,52,700

ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி தற்போது ரூ.6.70 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.11.53 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

(கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விலையும் எக்ஸ்ஷோரூம் இந்தியா)

Exit mobile version