புக்கிங் தொடங்கிய வெனியூ எஸ்யூவி வேரியன்ட் விபரம் வெளியானது

0072f hyundai venue1

ரூ.8 லட்சம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஹூண்டாய் நிறுவன வெனியூ எஸ்யூவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் மொத்தமாக 13 வேரியன்டுகள் கிடைக்க உள்ளது. மேலும் 7 நிறங்களில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

இரண்டு பெட்ரோல் என்ஜின் மற்றும் ஒரு டீசல் என்ஜின் கொண்டுள்ள இந்த காரில் 7 நிறங்கள் உட்பட மூன்று டூயல் டோன் நிறங்களையும் பெற்றதாக விற்பனைக்கு வெளியிட உள்ளது.

வெனியூ எஸ்யூவி வேரியன்ட் விபரம்

ஹூண்டாயின் புதிய 4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்டு வெனியூ காரில் E, S, SX,SX டூயல் டோன், SX (O) மற்றும் SX+ போன்ற வேரியன்டுகள் கிடைக்க உள்ளது. இந்த காரில் பொருத்தப்பட உள்ள என்ஜின்களின் விபரம் பின் வருமாறு ;-

புதிய 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் S, SX+ என இரு வேரியன்டுடன்  மற்றும் S, SX,SX டூயல் டோன், SX (O) வேரியன்டுகள் உடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

E, S, என இரு வேரியன்டில் மட்டும் ஹூண்டாய் ஐ20 காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை கொண்டுள்ள வெனியூவில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

E, S, SX,SX டூயல் டோன், மற்றும் SX (O) போன்ற வேரியன்டுகளில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை பெற்றதாக விளங்குகின்றது.

வெனியூ எஸ்யூவி காரில் ஒற்றை நிறத்தில் ஸ்டார் டஸ்ட், ஃபியரி ரெட், போலார் ஒயிட், டைஃபூன் சில்வர், டீப் ஃபாரஸ்ட், லாவா ஆரஞ்சு மற்றும் டெனிம் ப்ளூ என 7 நிறங்களும், இரு வண்ண கலவையில் டெனிம் ப்ளூ நிறத்துடன் மேற்கூறை போலார் ஒயிட், போலார் ஒயிட்  நிறத்துடன் மேற்கூறை பான்டம் பிளாக் மற்றும் லாவா ஆரஞ்சு நிறத்துடன் மேற்கூறை பான்டம் பிளாக் போன்றவை ஆகும்.

Exit mobile version