ஜீப் அவென்ஜர் எலக்ட்ரிக் எஸ்யூவி இந்தியா வருமா.?

ஜீப் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான அவென்ஜர் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக  400 கிமீ (WLTP Cycle) வழங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிராண்டின் முதல் பேட்டரி மின்சார வாகனம் (BEV), புதிய e-CMP2 மாடுலர் எலக்ட்ரிக் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டிற்குள் நான்கு மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் 2030 ஆம் ஆண்டிற்க்குள் முழுமையாக மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

Jeep Avenger EV

புதிய ஜீப் அவென்ஜர் எஸ்யூவி காரில் 115 kW (154 bhp) மற்றும் 260 Nm டார்க் வழங்குகின்ற ஒற்றை எலக்ட்ரிக் மோட்டார் பெற்றிருக்கின்றது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 400 கிமீ (WLTP) தூரம் செல்லும் மற்றும் குறைந்த வேகத்தில் நகரத்தில் பயணிக்கும் பொழுது 550 கிமீ வரை கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

100kW சார்ஜரைப் பயன்படுத்தி 24 நிமிடங்களில் 20 முதல் 80 சதவீதம் வரை வேகமாக சார்ஜ்ர் முறையில் செய்ய முடியும்.

இந்த காரில் ஆறு விதமான தேர்ந்தெடுக்கக்கூடிய டிரைவிங் மோடுகள் உள்ளன. அவை நார்மல், ஈக்கோ, ஸ்போர்ட் ஸ்னோ, சேன்ட் மற்றும் சாயில் ஆகும். அவெஞ்சர், லாங்கிட்யூட், ஆல்டிட்யூட் மற்றும் சம்மீட் என நான்கு விதமான வேரியண்டில் கிடைக்கும்.

அவென்ஜர் காரின் இன்டிரியரில் 10.25 இன்ச் தொடுதிரை ஸ்கிரீன் பெற்ற யூகனெக்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் முழு டிஜிட்டல் கிளஸ்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளை கொண்டுள்ளது.

இந்தியாவில் ஜீப் அவென்ஜர் எலக்ட்ரிக் எஸ்யூவிவ அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் தற்பொழுது கிடைக்கப் பெறவில்லை.

Exit mobile version