ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலில் பெட்ரோல் என்ஜின் நீக்கம்

விற்பனையில் கிடைக்கின்ற ஜிப் காம்பஸ் எஸ்யூவி காரில் இடம்பெற்றிருந்த 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் சர்வதேச அளவில் நீக்கப்பட்டுள்ளது. இனி காம்பஸ் காரில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

கடந்த 2022 ஆம் ஆண்டே பெட்ரோல் என்ஜினில் மேறுவல் கியர்பாக்ஸ் நீக்கப்பட்ட நிலையில், தற்பொழுது புதிய RDE விதிமுறைகளுக்கு மேம்படுத்தாமல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை நிறுத்தியுள்ளது. 163 PS பவரையும், 250 Nm டார்க்கையும் வழங்கியது. காம்பஸ் மாடலின்  விற்பனையில் 50 சதவீதத்திற்கு பெட்ரோல் வகைகள் பங்களித்தன என்பதும் குறிப்பிடதக்கதாகும்.

Jeep Compass SUV

சர்வதேச அளவில் சில நாடுகளில் காம்பஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மாடல் இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. மேலும் எதிர்காலத்தில் புதிய மாடல் வந்தாலும் பெட்ரோல் என்ஜின் இடம்பெறுவது கடினமே ஆகும்.

இனி, இந்த காரில் 2.0-லிட்டர் டீசல் எஞ்சின் 172 PS மற்றும் 350 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கிடைக்கிறது.

ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் எடிசனும் இந்திய சந்தையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் இந்திய சந்தையில் ஸ்டெல்லாநைட்ஸ் குழுமத்தின் FCA ஜீப் இந்தியாவில் பிரதானமான காம்பஸ் மற்றும் மெரிடியன் ஆகியவற்றை டீசல் என்ஜினுடன் தொடரும்.  ஃபிளாக்ஷிப் கிராண்ட் செரோகி மற்றும் ரேங்லர் ஆகியவை பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் கொண்டிருக்கும்.

ஜீப் காம்பஸ் விலை ₹ 21.44 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ₹ 27.84 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

Share
Tags: jeep compass