Automobile Tamilan

ரூ.1.70 லட்சம் வரை விலை குறைக்கப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவி

jeep compass suv model

இந்தியாவில் ஜீப் காம்பஸ் எஸ்யூவி விலை துவக்க நிலை Sport வேரியண்ட் ரூபாய் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற வேரியண்டுகள் ரூபாய் 14 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளன.

காம்பஸ் எஸ்யூவி காரில் தற்போது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. 170 HP பவரை வழங்குகின்ற இந்த எஞ்சின் ஆனது ஆறு வேகம் மேனுவல் மற்றும் ஒன்பது வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர் பாக்ஸை கொண்டு இருக்கின்றது. காம்பசில் Longitude, Night Eagle, Limited, Black Shark மற்றும் Model S ஆகிய வேரியண்டுகளில் Model S மட்டும் 4X4 ஆப்ஷனை பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் டூஸான், ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மற்றும் சிட்ரோயன் C5 ஏர்கிராஸ் ஆகியவற்றை காம்பஸ் எஸ்யூவி எதிர்கொள்ளுகின்ற நிலையில் ரூ.18.99 லட்சம் முதல் ரூ.32.41 லட்சம் வரை கிடைக்கின்றது.

Exit mobile version