Car News

ஜீப் காம்பஸ் 2WD விற்பனைக்கு அறிமுகமானது

jeep compass suv

குறைந்த விலை பெற்ற ஜீப் காம்பஸ் எஸ்யூவி 2 வீல் டிரைவ் பெற்ற ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு ரூ.23.99 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக 4 வீல் டிரைவ் கொண்ட மாடல் மட்டுமே ஆட்டோமேட்டிக் பெற்றிருந்தது.

Jeep Compass SUV

ஜீப் காம்பஸ் புதுப்பிக்கப்பட்ட ஸ்போர்ட், லாங்கிட்யூட், லாங்கிட்யூட்+, லிமிடெட் மற்றும் மாடல் எஸ் ஆகிய ஐந்து வேரியண்ட் வழங்குகிறது. ஸ்போர்ட் ஆரம்ப நிலை  மாடலாகத் தொடர்கிறது மற்றும் டீசல்-மேனுவல் பவர்டிரெயினுடன் மட்டுமே வழங்கப்படும் இதன் விலை 20.49 லட்சம். அடுத்ததாக, புதிய லாங்கிட்யூட் டிரிம், மேனுவல் மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெறுகிறது.

கூடுதலாக காம்பஸ் பிளாக் ஷார்க் எடிஷன் முழுவதும் கருப்பு நிற உட்புறம், கருப்பு அலாய் வீல் மற்றும் முழுவதும் ‘இக்னைட் ரெட்’ சிறப்பம்சங்களை வழங்கும்கின்றது.

காம்பஸ் காரில் 170hp பவர் மற்றும் 350Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 2.0-லிட்டர் டீசல் எஞ்சின் மட்டுமே வழங்குகிறது. ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் பெறுகிறது. புதியதாக வந்துள்ள 4X2 டிரைவ் அதிகபட்சமாக 16.2 kmpl வழங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

Share
Published by
MR.Durai
Tags: jeep compass