
இந்தியாவில் மைலேஜ் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்ய சிஎன்ஜி தேர்வு மிக சிறப்பானதாக உள்ள நிலையில், கியா நிறுவனமும் தனது காரன்ஸ் எம்பிவி காரில் டீலர்கள் மூலம் ஆப்ஷனலாக பொருத்தி தர உள்ளது. ஏற்கனவே இந்த மாடலின் போட்டியாளரான எர்டிகா/ரூமியன் ஆகியவற்றில் சிஎன்ஜி வழங்கப்பட்டு வருகின்றது.
பழைய கேரன்ஸில் மட்டுமே கிடைக்கின்ற நிலையில், புதிய கேரன்ஸ் கிளாவிஸில் வழங்கப்படவில்லை.
Kia Carens CNG
அரசு அங்கீகரித்துள்ள Lovato நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு டீலர்கள் வாயிலாக பொருத்தி தரப்பட உள்ள சிஎன்ஜி கிட்டின் விலை 77,900 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாரண்டி 3 வருடம் அல்லது 1,00,000 கிமீ வரை வழங்கப்படும் நிலையில், சிஎன்ஜி வேரியண்டின் மைலேஜ், பவர் மற்றும் டார்க் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
பெட்ரோல் முறை மட்டும்மலாமல் டீசல் என இரு ஆப்ஷனிலும் கிடைக்கின்ற இந்த கேரன்ஸில் 6 ஏர்பேக்குகள், ABS உடன் EBD, அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக், TPMS, ISOFIX இருக்கைகள் உள்ளன.
Kia Carens CNG price – ₹ 11.77 லட்சம்