Automobile Tamilan

ரூ.7 லட்சத்தில் கியா கிளாவிஸ் விற்பனைக்கு வருகையா.!

kia clavis spied

இந்திய சந்தையில் கியா நிறுவனம் அடுத்து பட்ஜெட் விலை கிளாவிஸ் எஸ்யூவி மாடல் 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற உள்ள கிளாவிசில் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இருவிதமான ஆப்ஷனிலும் வரவுள்ள நிலையில் முதற்கட்டமாக ICE பிரிவில் வரவுள்ளதால் விலை ரூ.7 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள சொனெட் காருக்கு கீழாக நிலை நிறுத்தப்படலாம்.

கியா கிளாவிஸ்

தென் கொரியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்ற கிளாவிஸ் விரைவில் இந்திய சாலைகளிலும் சோதனை ஓட்டத்துக்கு உட்ப்படுத்த வாய்ப்புள்ள நிலையில் ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலை விட சற்று மாறுபட்டதாக அமைந்திருக்கலாம்.

கியா கிளாவிஸ் மாடலும் பெறும் என்பதனால் 6000rpm-ல் 81 hp பவர், மற்றும் 113.8 Nm டார்க் 4000rpm-ல் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும் கிடைக்கலாம். கூடுதலாக டர்போ என்ஜினும் இடம்பெறலாம்.

கூடுதலாக எலக்ட்ரிக் பவர்டிரெயின் இடம்பெற உள்ள இந்த மாடலின் ரேஞ்ச் 300-500 கிமீ பயணிக்கும் திறனை பெற்றிருக்கலாம்.

முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்ற கிளாவிசின் முன்பக்க அமைப்பு சற்று ஆக்ரோஷ்மான தோற்றத்தை வெளிப்படுத்தவும், அதே நேரத்தில் பாக்ஸ் ஸ்டைல் வடிவமைப்புடன் அமைந்திருக்கின்றது.

முன்பே வெளிவந்த சோதனை படங்களில் வெளியான இன்டிரியர் அமைப்பில் மிகவும் உயரமான ஹெட்ரூமுடன் கூடிய விசாலமான கேபினை கொண்டிருக்கின்றது. சோதனை ஒட்டத்தில் உள்ள மாடலில் 360 டிகிரி கேமரா, லெவல் 2 ADAS, காற்றோட்டமான இருக்கை அமைப்பினை பெற்றுள்ளது.

வரும் 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அறிமுகம் செய்யப்பட்டு 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதத்தில் விற்பனைக்கு ரூ.7 லட்சத்துக்குள் துவங்கலாம். அதே நேரத்தில் எலக்ட்ரிக் மாடலாக 2025 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு கியா கிளாவிஸ் இவி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நடப்பு ஆண்டில் கியா கார்னிவல் மற்றும் EV9 எலக்ட்ரிக் என இரு மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிட கியா இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

image source

Exit mobile version