Clavis spied : கியா கிளாவிஸ் காரின் ஸ்பை படங்கள் வெளியானது

kia clavis

ஹூண்டாய் எக்ஸ்டர் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உள்ள கியா கிளாவிஸ் எஸ்யூவி சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற படங்களின் மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள டாடா பஞ்ச் மற்றும் எக்ஸ்டர் ஆரம்ப நிலை எஸ்யூவி மாடல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் கிளாவிஸ் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

Kia Clavis

சதுர வடிவ தோற்ற அமைப்பினை கொண்டுள்ள கிளாவிஸ் மாடலின் சோதனை ஓட்ட கார் முழுமையாக மறைக்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் மற்றும் ரன்னிங் எல்இடி விளக்குகளுடன் உயரமான வீல் ஆர்ச் பெற்றுள்ளது. சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள மாடலில் சன்ரூஃப்  பெற்றதாக அமைந்துள்ளது.

இன்டிரியர் அமைப்பில் மிகவும் உயரமான ஹெட்ரூமுடன் கூடிய விசாலமான கேபினை கொண்டிருக்கின்றது. சோதனை ஒட்டத்தில் உள்ள மாடலில் 360 டிகிரி கேமரா, லெவல் 2 ADAS, காற்றோட்டமான இருக்கை அமைப்பினை பெற்றுள்ளது.

எக்ஸ்டர் காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை கியா கிளாவிஸ் மாடலும் பெறும் என்பதனால் 6000rpm-ல் 81 hp பவர், மற்றும் 113.8 Nm டார்க் 4000rpm-ல் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி என இரண்டிலும் கிடைக்கின்றது.

அடுத்தப்படியாக, கிளாவிஸ் சிஎன்ஜி ஆப்ஷனை பெற்றால் 6000rpm-ல் 69 hp பவர் மற்றும் 4000rpm-ல் 95.2Nm டார்க் வழங்கும். 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற உள்ளது.

image source – https://www.instagram.com/shorts_car/