Automobile Tamilan

Kia Seltos: 1,00,000 முன்பதிவை அள்ளிய கியா செல்டோஸ் எஸ்யூவி

Kia-Seltos-Facelift-suv

கியா நிறுவனத்தின் செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் நடுத்தர எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஜூலை 2023 முதல் மிக குறைவான நாட்களிலே 1 லட்சம் முன்பதிவுகளை பெற்றிருப்பதுடன் 40 % வாடிக்கையாளர்கள் ADAS நுட்பத்தை பெற்ற வேரியண்ட் மற்றும் 80 % முன்பதிவு பனேரோமிக் சன்ரூஃப் கொண்டுள்ள மாடலுக்கு பதிவு செய்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் முன்பதிவு விகிதம் 58:42% மற்றும் சுமார் 50% விருப்பமாக ஆட்டோமேட்டிக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. ஆகஸ்ட் 2019 செல்டோஸ் வெளியான நாள் முதல் கியா இந்தியா 600,000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் தயாரித்துள்ளது. மொத்த உற்பத்தில் 75% உள்நாட்டு சந்தையில் விற்பனை ஆகியுள்ளது.

Kia seltos Facelift

கியா செல்டோஸ் காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் என மூன்று விதமான ஆப்ஷனை கொண்டதாக அமைந்துள்ளது. 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 bhp மற்றும் 250 Nm உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு மேனுவல்  மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது.

செல்டோஸ் காருக்கு கடும் சவாலினை ஹூண்டாய் கிரெட்டா ஏற்படுத்தி வரும் நிலையில் மற்ற மாடல்களான மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகன், ஹோண்டா எலிவேட், ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் உள்ளன.

17 விதமான பாதுகாப்பு சார்ந்த ADAS தொகுப்பினை கொண்டுள்ள 2024 கியா செல்டோஸ் காரின் விலை ரூ.10.90 லட்சம் முதல் ரூ.20.30 லட்சம் வரை கிடைக்கின்றது.

Exit mobile version