
ஹைப்ரிட் கார்களின் விலை பொதுவாக அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, இந்திய வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் இந்த காரைக் கொடுப்பதற்காக, ஹைப்ரிட் உதிரிபாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க கியா திட்டமிட்டு வருவதனால், இதனை சாத்தியப்படுத்திய பின்னரே செல்டோஸ் ஹைபிரிட்டை 2026 இறுதி அல்லது 2027ல் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Kia Seltos Hybrid launch Timeline
ஹைபிரிட் சார்ந்த வாகனங்களுக்கு மிக முக்கியமான பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் போன்ற முக்கிய பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம், விலையைக் கணிசமாகக் குறைக்க முடியும் என கியா நம்புவதனால் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால்தான் அறிமுகத்தில் சிறிது தாமதம் ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளது.
கியா இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு உயர் அதிகாரி அதுல் சூட் பேசுகையில், ஹைபிரிட் கார் விற்பனைக்கு வர இன்னும் சிறிது காலம் ஆகலாம் என குறிப்பிட்டார். 2027-ம் ஆண்டின் முற்பகுதியில் அல்லது 2026-ம் ஆண்டின் இறுதியில் இந்த ஹைப்ரிட் மாடல் இந்தியச் சாலைகளில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், இதே காலகட்டத்தில் ஹூண்டாய் நிறுவன க்ரெட்டா எஸ்யூவியிலும் ஹைபிரிட் வர வாய்ப்புள்ளது. ஏற்கனவே, இந்திய சந்தையில் மாருதி சுசூகி, டொயோட்டா என இரண்டும் ஹைபிரிட் வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.