Site icon Automobile Tamilan

ஸ்போர்ட்டிவ் லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம்

மணிக்கு 306 கிமீ வேகத்தில் சீறும் காளையாக லம்போர்கினி உரஸ் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் எஸ்யூவி என்ற கோஷத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள உரஸ் மிகவும் தனித்துவமான வடிவமைப்புடன் ஸ்போர்ட்டிவ் அம்சங்களை பெற்றதாக விளங்குகின்றது.

லம்போர்கினி உரஸ் எஸ்யூவி

சூப்பர் ஸ்போர்ட்டிவ் கார்களை தயாரிப்பதில் பிரசத்தி பெற்று விளங்கும் இத்தாலியின் லம்போர்கினி நிறுவனத்தின் பிரமாண்டமான படைப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள உரஸ் எஸ்.யூ.வி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் வரலாற்றில் முதலாவது LM002 மாடலான ஆஃப் ரோடர் எஸ்யூவி 1986 முதல் 1993 ஆம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்டது அதனை தொடர்ந்து இரண்டாவது எஸ்யூவி மாடலாக உருஸ் விளங்குகின்றது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MLB பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட பென்ட்லி பென்டைகா, போர்ஷே கேயேன் மற்றும் ஆடி Q7 போன்ற எஸ்யூவிகளை பின்பற்றி உரஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஸ்டைலிஷான முன்பக்க கிரில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் இந்நிறுவனத்தின் பாரம்பரிய Y எல்இடி வடிவ ரன்னிங விளக்குகளுடன் அமைந்துள்ளது. ரேஸ் கார்களை போன்ற பின்புற அமைப்பில் அமைந்திருக்கின்ற டிஃப்யூஸருடன், இந்த மாடலில் புகைப்போக்கி மிகவும் ஸ்டைலிசாக வழங்கப்பட்டுள்ளது.  உரஸ் மாடல் 5,112mm நீளமும், 2,016mm அகலம் மற்றும் 1,638mm உயரம் மற்றும் 3,003mm வீல்பேஸ் பெற்றதாக உள்ள இந்த காரின் கெர்ப் எடை 2200 கிலோ எடை கொண்டதாக வந்துள்ளது.

இன்டிரியர் அமைப்பில் மிக நேர்த்தியாக ஃபினிஷ் செய்யப்பட்ட டேஸ்போர்டுடன் மூன்று ஸ்போக் வீல் கொண்ட ஸ்டீயரிங் உடன் டிஎஃப்டி திரையுடன் கூடியதாக, 12 வழி அட்ஜெஸ்டபிள் கொண்ட இருக்கை அமைப்புடன், முன்புறத்தில் இரண்டு இருக்கைகளுடன், பின்புறத்தில் இரண்டு அல்லது மூன்று இருக்கை தேர்வுகளில் உரஸ் மாடல் வழங்கப்பட உள்ளது. பூட் வசதி அமைப்பில் 616 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக அமைந்திருக்கின்றது.

4.0 லிட்டர் வி8 டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 650 ஹெச்பி ஆற்றல் மற்றும் 850 என்எம் டார்க் வெளிப்படுதுகின்றது. ஆல் வீல் டிரைவ் அம்சத்தை பெற்றுள்ள உரஸ் காரில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.  0 முதல் 100 கிமீ வேகத்தை எட்ட 3.6 விநாடிகளும், 0 முதல் 200 கிமீ வேகத்தை எட்ட 12.8 விநாடிகளும் எட்டும் திறன் பெற்ற உரஸ் சூப்பர் எஸ்யூவி காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 305 கிமீ ஆகும்.

உரஸ் எஸ்யூவி காரில் ஸ்டெரடா, ஸ்போர்ட், கோர்ஸா, நெவி (பனி), டெர்ரா (ஆஃப்ரோடு) மற்றும் செப்பியா (மணல்) ஆகிய மோட்களுடன் கூடுதலாக கஸ்டமைஸ் திறன் பெற்ற இகோ மோட் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது.

இவற்றில் நெவி (பனி), டெர்ரா (ஆஃப்ரோடு) மற்றும் செப்பியா (மணல்) போன்ற மோட்களில் வாகனத்தின் கிரவுன்ட் கிளியரன்ஸ் உயரத்தை சஸ்பென்ஷன் கொண்டு 158mm முதல் 248mm வரை அதிகரிக்க இயலும்.

பெர்ஃபாமென்ஸ் ரக சூப்பர் எஸ்யூவி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள லம்போர்கினி உரஸ் எஸ்யூவி விலை $200,000 அமெரிக்காவில் விற்பனைக்கு கிடைக்கப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில்  அடுத்த ஆண்டின் மத்தியில் உரஸ் சந்தைக்கு வரக்கூடும்.

 

Exit mobile version