Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
5 ஆண்டுகளில் 2 லட்சம் கிரெட்டா கார்களை ஏற்றுமதி செய்த ஹூண்டாய் | Made in India Hyundai CRETA export cross 2 lakh milestone

5 ஆண்டுகளில் 2 லட்சம் கிரெட்டா கார்களை ஏற்றுமதி செய்த ஹூண்டாய்

3fbad hyundai creta suv

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி கார் மாடலான கிரெட்டா விற்பனைக்கு வெளியிடப்பட்டு 5 ஆண்டுகளுக்குள் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.

4 கண்டங்களில் சுமார் 88 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற கிரெட்டா எஸ்யூவி இந்தியாவில் உள்ள தமிழக ஆலையில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. புதிய மற்றும் முந்தைய கிரெட்டா என இரண்டும் மொத்தமாக 2,00,000 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஃபோர்டு நிறுவனம் அதிக கார்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்து வந்த நிலையில் அதனை இப்போது ஹூண்டாய் இந்தியா முந்தியுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா தற்போது 10 மாடல்களை மேட்-இன்-இந்தியா’ கார்களாக ஏற்றுமதி செய்கிறது. அடாஸ் (சான்ட்ரோ), கிராண்ட் i10, எக்ஸ்சென்ட், கிராண்ட் i10 (நியோஸ்) & கிராண்ட் i10 (ஆரா), எலைட் i20, i20 ஏக்டிவ், அசென்ட் (வெர்னா), வென்யூ மற்றும் கிரெட்டா போன்ற மாடல்கள் 88 நாடுகளுக்கு ‘ஏற்றுமதி செய்கிறது.

ஹூண்டாயின் ஒட்டுமொத்த ஏற்றுமதி எண்ணிக்கை –

மார்ச் 2008 – 5,00,000
பிப்ரவரி 2010 – 10,00,000
மார்ச் 2014 – 20,00,000.

web title : Made in India Hyundai CRETA export cross 2 lakh milestone

Exit mobile version