Automobile Tamilan

ஏப்ரல் 29ல் புதிய மஹிந்திரா XUV 3XO விற்பனைக்கு அறிமுகம்

மஹிந்திரா 3XO டீசர்

XUV300 என அழைக்கப்பட்டு வந்த மாடல் புதுப்பிக்கப்பட்ட டிசைனுடன் மஹிந்திரா XUV 3XO என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய மாடலில் பயன்படுத்தப்பட உள்ள 3-எக்ஸ்-ஓ என குறிப்பிடப்படுகின்றது.

மஹிந்திராவின் பிரீமியம் டிசைன் பெற உள்ள முதல் மாடலான 3XO எஸ்யூவி பல்வேறு டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ICE வெர்ஷனில் தொடர்ந்து XUV300 பெயர் பயன்படுத்தலாம்.

Mahindra XUV 3XO

XUV 3XO இவி காரில் 148 hp பவர் மற்றும் 310 Nm டார்க் உடன் 375 கிமீ என MIDC சான்றிதழ் வழங்கப்பட்டு 34 kWh பேட்டரி பெற்று அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜ் மூலம் உண்மையான ரேஞ்ச் 250 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம்.

கூடுதலாக ரேஞ்ச் தருகின்ற 456 கிமீ என MIDC சான்றிதழ் வழங்கப்பட்டு 39.4 kwh பேட்டரி மூலம் சிங்கிள் சார்ஜ் மூலம் 290 கிமீ -310 கிமீ வரை வெளிப்படுத்தலாம்.

மஹிந்திரா XUV300

எக்ஸ்யூவி 300  காரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட டிசைன் வடிவமைப்பினை பெற உள்ள 3எக்ஸ்ஓ காரில் இரண்டு விதமான பவர் வழங்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று எஞ்சின் ஆப்ஷன்களை பெற உள்ளது.

110hp பவர் மற்றும் 131hp என இருவிதமான பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல்,  117hp பவர், வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டிருக்கும்.131hp பவரை வழங்குகின்ற 1.2 லிட்டர் TGDI என்ஜினில் ஏசியன் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

இரண்டு 10.25 அங்குல ஸ்கீரின் பெற்று ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றொன்று டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற உள்ளது. மஹிந்திரா BE கான்செப்ட்டில் இருந்து பெறப்பட்ட முன்புற பம்பர் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் பெறலாம்.

Exit mobile version