மஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

யுட்டிலிட்டி ரக வாகனங்கள் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் சாங்யாங் ரெக்ஸ்டான் ஜி4 அடிப்படையில் உயர் ரக எஸ்யூவி மாடலை மஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி என்ற பெயரில் ரூ.26.95 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்திரா குழுமத்தின் செயல்படும் சாங்யாங் நிறுவனத்தின் ரெக்ஸ்டான் ஜி4 எஸ்யூவி அடிப்படையில், இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலாக மஹிந்திரா பிராண்டில் வெளியிடப்பட உள்ள அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி மாடலில் உள்ள முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

183 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்பட்டு 450 என்எம் டார்க்கினை வழங்கும் திறனுடன் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஸ்யூவி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியில் மட்டும் முதற்கட்டமாக 2WD AT மற்றும் 4WD AT என இரண்டிலும் கிடைக்க உள்ளது.

அல்டுராஸ் G4 எஸ்யூவி போட்டியாளர்களான ஸ்கோடா கோடியக், டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர், இசுசூ MU-X, மிட்ஷூபிசி அவுட்லேண்டர் மற்றும் ஹோண்டா சிஆர்-வி உள்ளிட்ட மாடல்களை நேரடியாக எதிர்கொள்ள உள்ள இந்த மாடல் போட்டியாளர்களை விட கூடுலான நவீன வசதிகளாக எல்இடி டெயில் மற்றும் முகப்பு விளக்கு, 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யும் ஓட்டுநர் இருக்கை, 9 காற்றுப்பை,  9.2 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ,  3D வடிவில் 360 டிகிரி கோண கேமரா என பல்வேறு வசதிகளை பெற்று விளங்குகின்றது.

பொதுவாக மஹிந்திரா நிறவனம் தன்னுடைய மாடல்களில் O என்ற எழுத்து முடியும் வகைகளில் பெயரை வைப்பதனை முதன்முறையாக தவிரத்து அல்டுராஸ் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

மஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி 2WD – ரூ. 26.95 லட்சம்

மஹிந்திரா அல்டுராஸ் G4 எஸ்யூவி 4WD – ரூ. 29.95 லட்சம்

(விற்பனையக விலை டெல்லி)