Automobile Tamilan

மஹிந்திரா BE 6 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை மற்றும் ரேஞ்ச் .!

BE 6 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் மாடலாக வெளியிடப்பட்டுள்ள BE 6 எஸ்யூவி காரில் பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் விளங்கும் நிலையில் ஆன்ரோடு விலை ரூ.20.36 லட்சம் முதல் துவங்குகின்றது.

பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக மார்ச் மாதம் முதல் 79Kwh பேட்டரி பேக் பெற்ற டாப் வேரியண்ட் பேக் தீரி டெலிவரி வழங்கப்பட உள்ளது.

Mahindra BE 6 on-road price

பிஇ 6 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.90 லட்சம் துவங்குகின்ற நிலையில், இதன் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் அட்டவனையில் உள்ளது.

Variant  Ex-showroom Price  on-road Price 
Pack One (59kWh) Rs 18,90,000 Rs 20,36,364
Pack  (59kWh) Rs 20,50,000 Rs 21,98,905
Pack Two (59kWh) Rs 21,90,000 Rs 23,54,870
Pack Three Select (59kWh) Rs 24,50,000 Rs 26,19,765
Pack Three (79kWh) Rs 26,90,000 Rs 28,93,890

கொடுக்கப்பட்டு விலையில் சார்ஜர் இணைக்கப்படவில்லை, ஆனால் கட்டாயம் சார்ஜர் வாங்க வேண்டும் என்ற மஹிந்திரா குறிப்பிட்டுள்ளதால், 7.2Kw சார்ஜரை பெறும் பொழுது ரூ.50,000 அல்லது 11Kw சார்ஜரை வாங்கும் பொழுது ரூ.75,000 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த விலை 59Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள பிஇ 6 வேரியண்ட் பவர்  231hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 542 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது.

அடுத்து, டாப் வேரியண்ட் 79Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள பிஇ 6 வேரியண்ட் பவர்  286hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 656 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது.

Exit mobile version