மஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு ZX அறிமுகமானது

மஹிந்திரா பொலிரோ கேம்பர்

பிரபலமான பிக்கப் டிரக் மாடல்களில் ஒன்றான மஹிந்திரா பொலிரோ கேம்பர் மாடலில் புதிதாக 1000 கிலோ கிராம் வரை கார்கோ அல்லது பயணிகளை சுமக்கும் திறனுடன் கேம்பர் கோல்டு ZX டாப் மாடலாக ரூ.7.26 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

இரண்டு கேபின் கொண்ட பிக்கப் டிரக் மாடலான பொலிரோ கேம்பர் கோல்டு இசட்எக்ஸ் வேரியண்டில் 63 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

பொலிரோ கேம்பர் பிக்கப் டிரக்

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்புற கிரில் மற்றும் பிரதிபலிக்கும் அம்சத்துடன் கூடிய ஹெட்லேம்ப்கள், மஹிந்திராவின் இரட்டை கேபின் பிக்-அப் பிரிவு கேம்பர், புதுப்பிக்கப்பட்ட நிலையில், மஹிந்திரா பொலிரோ கேம்பர் கோல்டு இசட்எக்ஸ் பிரீமியம் வேரியண்டில், 2,523 சிசி M2Dcr எனஜினிலிருந்து 63 ஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 195 என்எம் உச்ச முறுக்குவிசையையும் பெறுகிறது.  இந்த மாடலில் 4WD விருப்பம் வழங்கப்பட்டுள்ளது.

5 இருக்கைகள் கொண்ட இந்த பிக்கப் டிரக்கில் இன்டிரியர் மேம்பட்டு புதிய சென்டர் கன்சோல், ஹெட்ரெஸ்ட் ஃபாக்ஸ்-லெதர் இருக்கைகள், புதிய பாடி கிராபிக்ஸ், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், பவர் ஸ்டீயரிங் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் வசதிக்காக சீட் பெல்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Exit mobile version