14 லட்சம் பொலிரோ கார்களை விற்பனை செய்த மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற பொலிரோ எஸ்யூவி காரினை 2000 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 14 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2023 ஆம் நிதியாண்டில் மட்டும் 1,00,577 யூனிட்டுகளுக்கு மேலாக விற்பனை செய்துள்ளது.

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொலிரோ நியோ, பொலிரோ எஸ்யூவி வரிசையின் ஈர்க்கக்கூடிய விற்பனையில் வளர்ச்சி பதிவு செய்ய மற்றொரு காரணமாகும்.

மஹிந்திரா பொலிரோ

சாதனை குறித்து பேசிய மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் துறை தலைவர் விஜய் நக்ரா, “மொத்தம் 14 லட்சத்துக்கு அதிகமான விற்பனையை பதிவு செய்துள்ளது. வளரும் நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் அதிகப்படியான வரவேற்பினை பெற்றுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பொலிரோ நியோ நகர்ப்புற சந்தைகளில் புதிய வாடிக்கையாளர்களை  வெற்றிகரமாக விரிவுப்படுத்தியுள்ளது.

இரண்டு மாடல்களும் 2022 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2023 நிதியாண்டில் 28 சதவீதத்திற்கும் அதிகமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

B4, B6, B6(0) என மூன்று வகைகளில் கிடைக்கும் பொலிரோ காரின் ஆரம்ப விலை ரூ. 9.78 லட்சம் முதல் ரூ. 10.78 லட்சம் (எக்ஸ்ஷோரூம்), 76hp மூன்று சிலிண்டர் mHawk 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

அடுத்து பிரீமியம் ரக பொலிரோ நியோ காரில் 98 hp மற்றும் 260Nm டார்க் வழங்குகின்ற mHawk 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மாடல் ரூ.9.62 லட்சம் முதல் ரூ.11.36 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

This post was last modified on April 25, 2023 10:41 AM

Share