2.92 லட்சம் எஸ்யூவிகளுக்கு முன்பதிவு தினறும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி மாடல்களுக்கு தொடர்ந்து முன்பதிவு அதிகரித்து வருவதனால் 2,92,000 எஸ்யூவிகளுக்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டெலிவரியை அதிகரிக்க உற்பத்தி எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

நாட்டின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம், ஸ்கார்பியோ மற்றும் XUV700 கார்களுக்கு அமோகமான முன்பதிவு நடைபெற்று வருகின்றது. எனவே, புதிய எஸ்யூவிகளான XUV300, மற்றும் தார் 5 டோர் எஸ்யூவி ஆகியவற்றின் அறிமுகத்தை 2024 ஆம் ஆண்டுக்கு மாற்றியுள்ளது.

மஹிந்திரா எஸ்யூவி

Q4 FY2023 நிதியறிக்கை முடிவுகள் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில்,  3 லட்சம் எஸ்யூவிகளை டெலிவரி செய்வதற்கான ஆர்டர்கள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

மஹிந்திராவின் முன்பதிவுகளின் எண்ணிக்கை தற்போது 2.92 லட்சத்தை கடந்துள்ளது. இவற்றில், ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகியவற்றின் மொத்த ஸ்கார்பியோ எஸ்யூவி அதிகபட்ச ஆர்டர்களை மஹிந்திரா பெற்றுள்ளது. இதுவரை, ஸ்கார்பியோ டெலிவரி செய்யப்படாத 1.17 லட்சம் வாகனங்கள் உள்ளன.

இரண்டாவது இடத்தில் மிகவும் பிரபலமான XUV700 எஸ்யூவி 78,000க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ளது. மேலும் மஹிந்திரா தார் மாடல் 58,000 யூனிட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தார் மாடலின் மாதந்திர உற்பத்தி எண்ணிக்கை 14,000 ஆக இருக்கலாம்.

XUV300 மற்றும் XUV400 EV இணைந்து சுமார் 29,000 ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன. XUV400 சில நகரங்களில் உடனடியாகக் கிடைக்கும் அதே வேளையில், பெரும்பாலான வகைகளில் XUV300 மாடல் ஒரு மாதத்தில் டெலிவரி வழங்கப்படுகின்றது. இதன் உற்பத்தி திறன் ஒவ்வொரு மாதமும் சுமார் 10,000 யூனிட்கள் ஆகும்.

பொலிரோ நியோ உட்பட பொலிரோ எஸ்யூவிகள் தற்போது 8,200 ஆர்டர்கள் நிலுவையில் உள்ளன. இரண்டுமே பெரும்பாலும் உடனடி டெலிவரிக்கும் அவற்றின் உற்பத்தி திறனுக்கும் கிடைக்கின்றன. இதன் உற்பத்தி திறன் ஒவ்வொரு மாதமும் சுமார் 10,000 யூனிட்கள் ஆகும்.

தற்பொழுது மஹிந்திரா நிறுவனத்தின் ஒரு மாதத்திற்கு 55,000 முன்பதிவுகளைப் பெறுகிறது, மஹிந்திரா ஒரு மாதத்திற்கு 39,000 யூனிட்களின் மொத்த உற்பத்தித் திறனை கொண்டுள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் 33,000 வாகனங்களை மட்டுமே டெலிவரி செய்ய முடிந்தது. இதற்கு காரணம் XUV700 மற்றும் Scorpio N மாடல்களுக்கு செமி கண்ட்ரோல் தட்டுப்பாடு காரணமாகும்.

மஹிந்திரா அடுத்த 6 முதல் 7 மாதங்களில் உற்பத்தி திறனை 49,000 யூனிட்களாக உயர்த்தவும், ஒரு மாதத்தில் XUV 700 மற்றும் Scorpio N உற்பத்தி எண்ணிக்கையை 10,000 யூனிட்கள் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் காத்திருப்பு காலம் குறையலாம். ஆர்டர் ரத்து 8 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என மஹிந்திரா & மஹிந்திரா செயல் இயக்குனர் (ஆட்டோ மற்றும் விவசாயம்) ராஜேஷ் ஜெஜூரிகர் தெரிவித்தார்.

 

Share