Automobile Tamilan

ரூ.25,000 வரை மஹிந்திராவின் எஸ்யூவி விலை உயர்ந்தது

mahindra scorpio n

தார். ஸ்கார்ப்பியோ-N, மற்றும் பொலிரோ நியோ உள்ளிட்ட மாடல்களின் விலையை ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.25,000 வரை மஹிந்திரா நிறுவனம் உயர்த்தியுள்ளது. குறிப்பாக ஸ்காரப்பியோ என் எஸ்யூவி விலையை அதிகபட்சமாக ரூ.25,000 அதிகரித்துள்ளது.

பிரசத்தி பெற்ற மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N எஸ்யூவி மாடலின் Z2 முதல் Z4 வரை உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் வகைகள் ரூ.25,000 வரை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், Z8 2WD வேரியண்டுகள் ரூ.10,000 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக விலை உயர்த்தப்பட்டபிறகு மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N விலை ரூ.13.85 லட்சம் முதல் ரூ. 24.54 வரை கிடைக்கின்றது.

மஹிந்திரா பொலிரோ நியோ காரின் விலை ரூ.5,000 முதல் ரூ.14,000 வரை உயர்த்தப்பட்டு N4, N8 வேரியண்டுகள் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. பொலிரோ நியோ விலை ரூ.9.95 லட்சம் முதல் ரூ.12.16 லட்சம் வரை கிடைக்கின்றது.

அடுத்து, மஹிந்திராவின் பிரபலமான தார் எஸ்யூவி விலை ரூ. 11.35 லட்சம் முதல் ரூ.17.60 லட்சம் வரை கிடைக்கின்றது. குறிப்பிட்ட சில வேரியண்டுகள் மட்டும் ரூ.10,000 வரை விலை உயர்ந்துள்ளது.

சமீபத்தில் மஹிந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் 23 மாடல்கள் உட்பட உற்பத்தி அதிகரிக்கவும், 2.20 லட்சம் ஆர்டர்களை பெற்றுள்ளது.

 

Exit mobile version