Automobile Tamilan

மஹிந்திராவின் தார் ராக்ஸ் 4X4 எஸ்யூவி விலை பட்டியல் வெளியானது

mahindra thar roxx front

மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராக்ஸ் எஸ்யூவி மாடலில் கொடுக்கப்பட்டிருக்கின்ற 4×4 ஆல் டிரைவ் மாடலின் விலை ரூ.18.79 லட்சம் முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பாக விற்பனைக்கு வெளியிடப்பட்ட பொழுது ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற ஆல் வீல் டிரைவ் மாடல்களின் விலை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக 5 டோர்  தார் ராக்ஸ் 4×2 மாடல்களின் ஆரம்ப விலை ரூபாய் 12.99 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூபாய் 20.49 லட்சம் வரை அமைந்துள்ளது. மூன்று விதமான வேரியண்டுகளில் மட்டும் கிடைக்கின்ற 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆல் வீல் டிரைவ் மாடல் MX5 MT, AX5L AT, AX7L MT மற்றும் AX7L AT ஆகும்.

M-Hawk 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் RWD. வேரியண்ட் 152 bhp மற்றும் 330 Nm டார்க், 4WD பெறுகின்ற 173 bhp and 370 Nm என இரண்டும் ARAI சான்றிதழ் படி ஒரு லிட்டருக்கு 15.2 கிலோ மீட்டர் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thar Roxx 4×4 Diesel

(Ex-showroom)

அக்டோபர் 3 ஆம் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட்ட உள்ளது.

 

Exit mobile version