இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஃப் ரோடு மாடலான மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் புதிதாக பச்சை நிறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக இந்த காரில் ஐந்து விதமான நிறங்கள் எர்த் எடிசன் உட்பட பெற்று இருந்த நிலையில் கூடுதலாக வந்துள்ள நிறத்தின் மூலம் தற்பொழுது ஆறு விதமான நிறங்களில் கிடைக்கின்றது.
கருப்பு, வெள்ளை, சிவப்பு, கிரே, புதிய பச்சை மற்றும் எர்த் எடிசன் என 6 விதமான நிறங்களை பெற்றுள்ளது. சமீபத்தில் துவக்க நிலை வேரியண்டுகளின் விலையை ரூ.10,000 வரை மஹிந்திரா உயர்த்தியுள்ளது.
மிகச் சிறப்பான ஆஃப் ரோடு வசதிகளை கொண்டுள்ள மூன்று டோர் பெற்ற தார் மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.5 லிட்டர் D117 CRDe டீசல், மற்றும் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
1.5 லிட்டர் D117 CRDe டீசல் என்ஜின் அதிகபட்சமாக 118 PS பவர், 300 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் RWD பெற்று 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்டுள்ளது.
2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜின் அதிகபட்சமாக 132 PS பவர், 300 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் பெற்ற 4WD ஆப்ஷனை கொண்டுள்ளது.
2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 152 PS பவர், 300 Nm டார்க் (320Nm ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்தும் நிலையில் RWD மற்றும் 4WD பெற்று 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ், 6 வேக ஆட்டோமேட்டிக் கொண்டுள்ளது.
2024 மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ. 14.25 லட்சம் முதல் ரூ.22.16 லட்சம் வரை கிடைக்கின்றது.
2024 Mahindra THAR Variant | ex-showroom Prices | on-road Prices |
---|---|---|
1.5 l AX(O) HT RWD MT | ₹ 11,35,000 | ₹ 14,24,654 |
1.5 l LX HT RWD MT | ₹ 12,85,000 | ₹ 16,09,065 |
2.2 l AX(O) CT 4WD MT | ₹ 14,85,000 | ₹ 18,79,432 |
2.2 l AX(O) HT 4WD MT | ₹ 14,99,899 | ₹ 18,97,853 |
2.2 l LX CT 4WD MT | ₹ 15,74,900 | ₹ 19,91,432 |
2.2 l LX HT 4WD MT | ₹ 15,75,001 | ₹ 19,91,536 |
2.2 l Thar Earth 4WD MT | ₹ 16,15,000 | ₹ 20,16,521 |
2.2 l LX CT 4WD AT | ₹ 17,14,900 | ₹ 21,64,626 |
2.2 l LX HT 4WD AT | ₹ 17,20,001 | ₹ 21,70,871 |
2.2 l Thar Earth 4WD AT | ₹ 17,60,000 | ₹ 22,15,951 |
2.0 l AX(O) CT 4WD MT | ₹ 14,30,000 | ₹ 18,11,978 |
2.0 l LX HT 4WD MT | ₹ 15,00,001 | ₹ 18,99,076 |
2.0 l Thar Earth 4WD MT | ₹ 15,40,000 | ₹ 19,44,324 |
2.0 l LX HT 2WD AT | ₹ 14,09,900 | ₹ 17,81,320 |
2.0 l LX CT 4WD AT | ₹ 16,49,901 | ₹ 20,85,652 |
2.0 l LX HT 4WD AT | ₹ 16,59,800 | ₹ 20,96,542 |
2.0 l Thar Earth 4WD AT | ₹ 16,99,000 | ₹ 21,40,503 |
(all price on road Tamilnadu)
இந்திய சந்தையில் தார் எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் 5 கதவுகளை பெற்ற மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி உள்ளது. கூடுதலாக 5 கதவுகளை பெற்ற தார் அர்மடா எஸ்யூவி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படலாம்.