வருகின்ற செப்டம்பர் 06 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள மஹிந்திரா XUV400 மின்சார கார் முன்பாக eXUV300 என்ற பெயரில் XUV300 காரின் அடிப்படையில் 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்படடது.
உற்பத்தி நிலை XUV400 எலெக்ட்ரிக் காரில் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட eXUV300 கான்செப்ட்டின் வடிவமைப்பைக் கொண்டு இருப்பினும், ICE-இயங்கும் XUV300 போலல்லாமல், XUV400 நான்கு மீட்டருக்கும் (சுமார் 4.2 மீட்டர்) நீளமாக இருக்கும், ஏனெனில் குறைந்த வரி 4 மீட்டர் விதி மின்சார வாகனங்களுக்குப் பொருந்தாது.
எலக்ட்ரிக் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கான பேட்டரி செல்களை எல்ஜி கெம் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஆக விளங்கும். கொரியவின் பேட்டரி உற்பத்தியாளரான எல்ஜி இந்தியா சந்தையின் பயன்பாடுகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட லித்தியம் அயன் பேட்டரியை மஹிந்திரா நிறுவனத்துக்கு என தயாரித்து வழங்க உள்ளது.
XUV400 எலக்ட்ரிக் எஸ்யூவி டாடா டிகோர் இவி, நெக்ஸான் பிரைம் ஈவி மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகியவற்றுடன் போட்டியிடும்.