Automobile Tamilan

மஹிந்திரா BE, XUV.e எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் BE மற்றும் XUV.e என இரண்டு பிரிவில் 5 எலெக்ட்ரிக் கார்களை இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் களமிறக்க திட்டமிட்டுள்ளது. XUV.e8, XUV.e9, BE.05, BE.07 மற்றும் BE.09 என 5 மின்சார கார்களை விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டு முதல் துவங்க திட்டமிட்டுள்ளது.

XUV.e பிராண்டின் கீழ் இரண்டு மாடல்கள் XUV.e8 மற்றும் XUV.e9 – புதிதாக அமைக்கப்பட்ட BE துணை பிராண்டின் கீழ் மூன்று மாடல்கள் BE.05, BE.07 மற்றும் BE.09 என அனைத்து ஐந்து மின்சார எஸ்யூவிகளும் ஒரே Indian Global (INGLO) பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிளாட்பாரம் மற்றும் பேட்டரி தொகுதியைப் பகிர்ந்து கொள்ளும், இருப்பினும் அவை வேறுபடும்.

Indian Global (INGLO) பிளாட்பாரத்தின் முழுமையான நுட்ப விபரக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது.InGlo பிளாட்பாரத்தை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பகிர்ந்து கொள்ள உள்ளது.

MAHINDRA INGLO PLATFORM TECHNICAL DETAILS
Parameter Dimension
Length range 4,368 to 4,735mm
Wheelbase range 2,762 to 2,775mm
Battery to ground clearance 218mm
Battery size 60 to 80kWh
Battery type LFP blade and prismatic cells
Battery charging speed Up to 175kW, up to 80% in less than 30 mins
Driving range Claimed, about 435 to 450km (WLTP cycle)
Front motor power 109hp
Front motor torque 135Nm
Rear motor power 286hp
Rear motor torque 560Nm
Total system power (RWD) 231 to 286hp
Total system power (AWD) 340 to 394hp

Mahindra XUV.e8

விற்பனையில் உள்ள எக்ஸ்யூவி 700 மாடல் அடிப்படையில் INGLO பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்படுகின்ற எலெக்ட்ரிக் XUV.e8 எஸ்யூவி எல்இடி விளக்குகள் பெற்று மிக நேர்த்தியான தோற்றத்தை பெற்றுள்ளது.

XUV.e8 காரின் அளவுகள் 4,740 மிமீ நீளம், 1,900 மிமீ அகலம் மற்றும் 1,760 மிமீ உயரம். இது 2,762 மிமீ வீல்பேஸ் கொண்டிருக்கும். அதாவது XUV.e8 ஆனது XUV700 காரை விட 45mm நீளமும், 10mm அகலமும் மற்றும் 5mm உயரமும் இருக்கும், அதே சமயம் வீல்பேஸ் வெறும் 7mm நீளமாக இருக்கும். ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் பேட்டரி பேக் 80kWh வரை இருக்கும். பவர் 230hp முதல் 350hp வரை இருக்கும்.

உற்பத்திக்கு வரும் முதல் மாடல் XUV.e8 டிசம்பர் 2024ல் வெளியிடப்படும்.

Mahindra XUV.e9

ஏப்ரல் 2025 இல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்ற XUV.e9 தற்போதுள்ள எந்த மாடலுக்கும் எலெக்ட்ரிக் இணை அல்ல, ஆனால் கூபே போன்ற வடிவமைப்புடன் முற்றிலும் புதிய வாகனமாக XUV.e9 பரிமாணங்கள் 4,790 மிமீ நீளம், 1,905 மிமீ அகலம் மற்றும் 1,690 மிமீ உயரம் என மஹிந்திரா வெளிப்படுத்தியுள்ளது.
XUV.e9 கார் 2,775 மிமீ வீல்பேஸைக் கொண்டிருக்கும். XUV.e9 மாடல் 5 இருக்கைகள் கொண்ட மாடலாக இருக்கும்.

Mahindra BE.05

மஹிந்திரா BE05 எஸ்யூவி கார் 4370 மீ நீளம், 1900 மீ அகலம் மற்றும் 1635 மீ உயரம், 2775 மீ வீல்பேஸ் கொண்டதாக இருக்கும். இதனை ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் வாகனம் (Sports Electric Vehicle- SEV) என மஹிந்திரா கூறுகிறது. இந்த EV 2025ல் விற்பனைக்கு வரும்.

Mahindra BE.07

மஹிந்திரா BE.07 கார் 2026 ஆம் ஆண்டு விற்பனைக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 4565 மீ நீளம், 1900 மீ அகலம் மற்றும் 1660 மீ உயரம் மற்றும் BE.05 வீல்பேஸ் 2775 மீ இருக்கும். இது மூன்று வரிசை இருக்கை கொண்ட குடும்ப எஸ்யூவி ஆக இருக்கும், இது நீண்ட தூர பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் நகர பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும்.

Mahindra BE.09

மஹிந்திரா BE.09 காரின் வெளியீடு மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் இது கிராண்ட் டூரர் SUV ஆக இருக்கும் என்று இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version