Automobile Tamilan

ரூ.19.95 லட்சம் ஆரம்ப விலையில் XEV 9s எலக்ட்ரிக் எஸ்யூவி வெளியிட்ட மஹிந்திரா

new mahindra xev 9s

மஹிந்திரா நிறுவனத்தின பிரசத்தி பெற்ற XUV700 மாடலை தழுவியதாக வடிவமைக்கப்பட்டுள்ள XEV 9s மின்சார எஸ்யூவி காரில் 7 இருக்கை பெற்றிருப்பது மிகப்பெரிய பலமாக அமைந்து விலை ரூ.19.95 லட்சம் முதல் துவங்குகிறன்றது.

முந்தைய BE 6, XEV 9e மாடலில் உள்ள 59kWh மற்றும் 79kWh பேட்டரி பேக்குகளை பெற்றதை போலவே இந்த மாடலும் இதே பேட்டரிகளை பெற்று XEV 9e போன்ற வசதிகளை பெற்றதாகவும் கூடுதலாக 70Kwh பேட்டரியும் பெற்றதாக அமைந்துள்ளது.

Mahindra XEV 9s

ஆரம்ப நிலை எக்ஸ்இவி 9எஸ் 7 இருக்கை மாடல் 59Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள  பவர்  231hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 542 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது. அடுத்து, 70 kWh பேட்டரி, 180 kW மற்றும் 380 Nm சிறந்த பவரை வழங்குகிறது.

அடுத்து, டாப் வேரியண்ட் 79Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள XEV 9 எஸ் வேரியண்ட் பவர்  286hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 656 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது. மேலும் நான்கு டிரைவ் மோடுகள் (எவ்ரிடே, ரேஸ், ரேஞ்ச் மற்றும் ஸ்னோ) மற்றும் ஐந்து நிலை ரீஜென் ஆகியவை சலுகையில் உள்ளன.

எந்த வென்டும் இல்லா முன்பக்க கிரில், தலை கீழ் L வடிவ எல்இடி ரன்னிங் விளக்குடன மற்றும் ஹெட்லைட் தொகுதியில் செங்குத்தாக அடுக்கப்பட்ட ப்ரொஜெக்டர் யூனிட்கள், ஃபேசியாவில் எல்இடி லைட் பார், ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், ஏரோ இன்சர்ட்களுடன் கூடிய புதிய அலாய் டிசைனுடன் ரூஃப் ரெயில்கள், ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் இரு முனைகளிலும் பிரத்யேக மஹிந்திரா எலக்ட்ரிக் லோகோ உள்ளது.

உள்ளே, ஏழு இருக்கைகள் கொண்ட மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவியில் பனோரமிக் சன்ரூஃப், டேஷ்போர்டில் மூன்று டிஸ்பிளே அமைப்பு, இரண்டாவது வரிசை பயணிகளுக்கான திரைகள், ஹர்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், பவர்டு பாஸ் மோட், டூ-ஸ்போக் மல்டிஃபங்க்ஷன் பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் கொண்டுள்ளது.

மற்ற வசதிகளில் ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், ஆம்பியன்ட் லைட்டிங், பவர்டு டெயில்கேட், ஃப்ரங்க், சாய்ந்த இரண்டாவது வரிசை இருக்கைகள், ஆட்டோ-ஹோல்டுடன் கூடிய EPB மற்றும் அனைத்து பயணிகளுக்கும் ஹெட்ரெஸ்ட்கள் உள்ளன.

7.2Kw சார்ஜரை பெறும் பொழுது ரூ.50,000 அல்லது 11Kw சார்ஜரை வாங்கும் பொழுது ரூ.75,000 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

(EX-showroom)

Exit mobile version