மஹிந்திரா XUV700 காரில் எபோனி எடிசன் விற்பனைக்கு அறிமுகமானது.!

Mahindra XUV700 Ebony Edition

பிரசத்தி பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் கூடுதலாக புதிய Ebony எடிசனில் முழுமையான கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விலை ரூ.19.64 லட்சம் முதல் ரூ.24.14 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், சில இடங்களில் சில்வர் நிற இன்ஷர்ட்டுகளை பெற்றதாக அமைந்துள்ள வெளிப்புற நிறத்தை ஸ்டெல்த் பிளாக் என மஹிந்திரா குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, வெள்ளி நிற ஸ்கிட் பிளேட், கருப்பு கிரில் செருகல்கள் மற்றும் கருப்பு நிற ORVM-கள், அதே நேரத்தில் R18 கருப்பு அலாய் வீல்களை பெற்றுள்ளது.

இன்டீரியரில் கருப்பு லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, கருப்பு நிற டிரிம்கள் மற்றும் சென்டர் கன்சோல் மற்றும் கதவு பேனல்களில் வெள்ளி நிற இன்ஷர்டுகளும் உள்ளன. மற்றபடி, மெக்கானிக்கல் வசதிகள் மற்றும் கூடுதல் வசதிகளில் XUV700 AX7 & AX7 L வேரியண்டின் அடிப்படையிலான வசதிகளை பெற்று 200hp, 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 185hp, 2.2-லிட்டர் டீசல் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கின்றது.

P MT P AT D MT D AT
AX7 (7-Seater – FWD) ₹ 19.64 Lakh ₹ 21.14 Lakh ₹ 20.14 Lakh ₹ 21.79 Lakh
AX7 L (7-Seater – FWD) ₹ 23.34 Lakh ₹ 22.39 Lakh ₹ 24.14 Lakh

(எக்ஸ்-ஷோரும்)

Exit mobile version