ரூ. 3.6 கோடிக்கு ஏலம் போன மர்லின் மன்ரோவின் 1956 ஃபோர்டு தண்டர்பேர்ட் திருமண கார்

1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ. உலக இளைஞர்களின் காமத்தின் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம், இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது. நடிகை மர்லின் மன்ரோவின் மூன்றாவது திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட 1956 ஃபோர்டு தண்டர்பேர்ட் ஏலத்தில் விடப்பட்டது. இந்த கார் 2 கோடி வரை ஏலத்தில் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஃபோர்டு தண்டர்பேர்ட் கார் 1954 வெளியான தனிப்பட்ட ஆடம்பர கார் ஆகும். இந்த இன்ஜின் இதுவரை 30,399 மைல் மட்டுமே ஓட்டப்பட்டு இருந்தது. அழகிய கருப்பு வண்ணத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த கார் அந்த காலத்தில் மிக பிரபலமான காராக இருந்தது.

இந்த கார் குறித்து பேசிய ஏலம் விடும் நிறுவன அதிகாரி, இந்த கார் 1956ம் ஆண்டு மாடல் கார், பிளாக் சாப்ட் டாப் கொண்ட ஒயிட்வேல் டயர்கள் தற்போது ஏலத்தில் விடப்படுகிறது. இதுவே முதல் முறையாக வெளியான இரண்டு சீட் கொண்ட பிளாக் மற்றும் ஒயிட் இன்டிரீயர் கொண்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் தற்போதும் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்து குறிப்பிடத்தக்கது என்றார். இந்த காரின் இன்சூரன்ஸ் உள்பட ஆவணங்களை தற்போதைய உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.