பலேனோ, விட்டாரா பிரீஸ், எஸ்-கிராஸ் கார்களை திரும்ப பெறுகிறது மாருதி நிறுவனம்

பலேனோ, விட்டாரா பிரீஸ், எஸ்-கிராஸ் கார்களை மாருதி நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது. இதுகுறித்து சர்விஸ் சென்டர்களுக்கு மாருதி சுசூகி நிறுவனம் அனுப்பிய மெயிலில், ஸ்டீரிங் பிரச்சினை காரணமாக இந்த கார்கள் திரும்பப் பெறப்படுவதாகவும், பிரச்சினை உள்ள கார்களுக்கு இலவசமாக மாற்றி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த பிரச்சினை இந்த மூன்று மாடல் கார்களில் மட்டும் ஏற்ப்டுள்ளது என்றும், பலேனோ காரில் பெட்ரோல் மற்றும் டீசல் வகை கார்கள் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளன. மாருதி சர்விஸ் ஸ்டேஷன்களில் புதிய ஸ்டீயரிங் காலம் அசெம்பிளி மாற்றபட்டு, அதற்கு கூடுதலாக 3 ஆண்டு வாரண்ட்டியுடன் மொத்தமாக ஐந்து ஆண்டு வாரண்டி அளிக்கப்பட்டு வருகிறது.

வாரண்ட்டி முடிவு பெற்ற கார்களாக இருந்தால், அந்த கார்களுக்கு குட்வில் வாரண்ட்டி அடிப்படையில், ரிப்பேர் மேற்கொள்ளப்படும், பலேனோ, விட்டாரா பிரீஸ், எஸ்-கிராஸ் கார்கள் இந்த வரிசை கார்களில் பிரபலமாக இருந்து வரும் நிலையில் கார் தயாரிப்பாளர்கள் இதுபோன்ற பிரச்சினைகளை களைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.