13 ஆண்டுகளாக இந்தியாவின் நெ.1 கார் : மாருதி சுசுகி ஆல்டோ

இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான மாருதி சுசுகி ஆல்டோ கார் 13வது முறையாக இந்தியாவின் முதன்மையான காராக சந்தையில் நிலைத்து நிற்கின்றது.

மாருதி சுசுகி ஆல்டோ

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ கார் 16-17 ம் நிதி வருடத்தில் 2.41 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இந்தியாவின் முதன்மையான காராக விளங்கும் ஆல்டோ மாடலில் ஆல்டோ 800 , 1 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட ஆல்டோ கே10, ஆல்டோ சிஎன்ஜி உள்பட மூன்று விதமான ஆப்ஷன்களுடன் மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கின்றது.

கடந்த செப்டம்பர் 2000ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஆல்டோ கார் முதல் மூன்று வருடங்களில் மொத்த விற்பனையே ஒரு லட்சத்தை மட்டுமே பெற்றிருந்த நிலையில் சரியாக 17 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நிதி வருடத்தில் 2.41 லட்சம் அலகுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. 16-17 நிதி ஆண்டில் மாருதியின் மொத்த விற்பனை செய்யப்பட்ட 1,443,641 கார்களில் 17 சதவீத பங்களிப்பை மாருதி ஆல்டோ பதிவு செய்துள்ளது.

47.5 பிஹெச்பி ஆற்றலுடன் , 69 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் 800சிசி எஞ்சினை பெற்றுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

68 பிஹெச்பி ஆற்றலுடன் , 90 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் 999சிசி எஞ்சினை பெற்றுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக அமைந்துள்ள ஆல்டோ கார் குறைவான பராமரிப்பு செலவு ,  சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் மாடலாக விளங்குவதாக மாருதி நிர்வாக இயக்குநர் கல்சி தெரிவித்துள்ளார்.

Exit mobile version