மாருதி பலேனோ ஸ்மார்ட் ஹைபிரிட் கார் விற்பனைக்கு வந்தது

ரூபாய் 7.25 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி பலேனோ ஹைபிரிட் காரினை இந்திய சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. பிஎஸ்-6 என்ஜின் பெற்ற முதல் மாருதி நிறுவன காராக பலேனோ விளங்குகின்றது.

லிட்டருக்கு 23.87 கிமீ மைலேஜ் தரவல்ல மாடலாக மாருதி பலேனோ டியூவல்ஜெட் ஸ்மார்ட் ஹைபிரிட் 1.2 லிட்டர் K12C பெட்ரோல் என்ஜின் உடன் லித்தியம் ஐயன் பேட்டரி கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது.

மாருதியின் சுசூகி பலேனோ ஹைபிரிட் கார்

கடந்த 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வெளியான பலேனோ தற்போது வரை 5.50 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களை விற்பனை செய்து இந்தியாவின் சிறந்த ஹேட்ச்பேக் மாடல்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பலேனோ காரின் விலை சராசரியாக ரூ. 13,000 முதல் ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதே போது புதிய பாரத் ஸ்டேஜ் 6 ஹைபிரிட் என்ஜின் கொண்ட வேரியண்ட் விலை ரூ.89,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய கே12பி என்ஜின் ஆப்ஷனில் சிவிடி மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைத்து வரும் நிலையில், புதிய பிஎஸ் 6 என்ஜின் பெற்ற ஹைபிரிடில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12C பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு லித்தியம் ஐயன் பேட்டரி ஆதரவை கொண்டதாக உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு மைலேஜ் 23.47 கிலோமீட்டர் ஆகும். முன்பாக விற்பனைக்கு கிடைக்கின்ற 1.2 லிட்டர் என்ஜின் பெற்ற K12B என்ஜின் லிட்டருக்கு 21.4 கிமீ மட்டும் வழங்கி வந்தது.

முழுமையான பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் மூலம் நைட்ரஜன் ஆக்ஸைடு (NOx) நச்சு வாயுவின் அளவினை 25 சதவீத வரை குறைந்துள்ளது.

வேரியன்ட் விலை (டெல்லி)
பலேனோ Sigma ரூ. 5.58 லட்சம்
பலேனோ Delta ரூ. 6.36 லட்சம்
பலேனோ DualJet Smart Hybrid Delta ரூ. 7.25 லட்சம்
பலேனோ Delta CVT ரூ. 7.68 லட்சம்
பலேனோ Zeta ரூ. 6.97 லட்சம்
பலேனோ DualJet Smart Hybrid Zeta ரூ. 7.86 லட்சம்
பலேனோ Zeta CVT ரூ. 8.29 லட்சம்
பலேனோ Alpha ரூ. 7.58 லட்சம்
பலேனோ Alpha CVT ரூ. 8.90 லட்சம்