Automobile Tamilan

Maruti Baleno RS : மாருதியின் புதிய பலேனோ ஆர்எஸ் விற்பனைக்கு வந்தது

f8918 2019 maruti suzuki baleno rs

சமீபத்தில் வெளியான 2019 மாருதி பலேனோ காரினை தொடர்ந்து புதிய மாருதி பலேனோ ஆர்எஸ் கார் ரூ.8.76 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் பல்வேறு அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மாருதி பலேனோ ஆர்எஸ்

தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் 2019 ஆம் ஆண்டின் மாருதி பலேனோ ஆர்எஸ் கார் படம் வெளியிடபட்டுள்ளது. சாதாரன மாடலை விட கூடுதலான பவரை வழங்க வல்ல மாடலாக பிரிமியம் அம்சங்களை கொண்டதாக இந்த வேரியன்ட் கிடைக்கின்றது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட பலேனோ காரின் முன்புற பம்பர், கிரில், அலாய் வீல், இன்டிரியரில் மாருதியின் ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இரு நிற கலவையிலான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

பவர்ஃபுல்லான பலேனோ RS காரில் 100.5 ஹார்ஸ் பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் பெற்ற பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் எஞ்ஜினை பெற்றிருக்கும். இதன் டார்க் 150 நியூட்டன்மீட்டர் ஆகும்.  பவரை எடுத்து செல்ல 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கின்றது. பலேனோ ஆர்எஸ் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20.1 கிமீ ஆகும்.

தற்போது வரவுள்ள 2019 பலினோ ஆர்எஸ் காரில் முகப்பு பம்பர், கிரில் பனி விளக்கு அறை மற்றும், அலாய் வீல் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இன்டிரியர் தொடர்பான படம் வெளியாக நிலையில் புதிய பலேனோ காரை போன்று ஸ்டைலிஷான டேஸ்போர்ட், மாருதி ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றதாக விளங்கும்.

டுயல் ஏர்பேக், ஏபிஎஸ் இபிடி, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் மற்றும் கீலெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் என பல்வேறு வசதிகளை பெற்றிருக்கும்.

சந்தையில் உள்ள பலேனோ ஆர்எஸ் மாடலை விட புதிய மாடல் ரூ.29,000 விலை அதிகரிக்கப்பபட்டு விற்பனைக்கு வெளியிடப்படலாம். எனவே, புதிய 2019 பலேனோ ஆர்எஸ் விலை ரூ. 8.76 லட்சத்தில் வெளியாகியுள்ளது.

Exit mobile version