Automobile Tamilan

2025 மாருதி சுசூகி செலிரியோ ஆன்-ரோடு விலை மற்றும் சிறப்புகள்.!

மாருதி சுசூகி செலிரியோ ஆன்-ரோடு விலை

மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற சிறிய ரக ஹேட்ச்பேக் மாடலாக உள்ள செலிரியோ காரில் 6 ஏர்பேக்குடன் அடிப்படையான பாதுகாப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு விலை ரூ.5.69 லட்சம் முதல் ரூ.8.10 லட்சம் வரை ஆன்-ரோடு விலை அமைந்துள்ளது.

செலிரியோ மாடலில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

Maruti Suzuki Celerio on-road price

செலிரியோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.70 லட்சம் துவங்குகின்ற நிலையில், இதன் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் அட்டவனையில் உள்ளது. சிஎன்ஜி வேரியண்ட் ஆன்-ரோடு விலை ரூ.7.24 லட்சமாகவும், பெட்ரோல் மேனுவல் ரூ.5.69 லட்சம் முதல் ரூ.7.48 லட்சம் வரையும், ஏஎம்டி கியர்பாக்ஸ் ரூ.6.80 லட்சம் முதல் ரூ.8.10 லட்சம் வரை அமைந்துள்ளது.

Variant  Ex-showroom Price  on-road Price 
Celerio LXi MT Rs 4,69,900 Rs 5,68,764
Celerio VXi MT Rs 5,15,900 Rs 6,26,654
Celerio ZXi MT Rs 5,70,900 Rs 6,92,543
Celerio ZXi+ MT Rs 6,27,900 Rs 7,47,890
Celerio VXi AGS Rs 5,60,900 Rs 6,79,987
Celerio ZXi AGS Rs 6,15,900 Rs 7.46,542
Celerio ZXi+ AGS Rs 6,72,900 Rs 8,09,654
Celerio VXi CNG Rs 5,97,900 Rs 7,23,809

(GST 2.0 on-road price Tamilnadu)

கொடுக்கப்பட்டுள்ள ஆன்-ரோடு விலை பட்டியலில் காப்பீடு, ஆர்டிஓ கட்டணங்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆக்செரீஸ் உட்பட பல்வேறு கட்டணங்கள் தொடர்பாக கூடுதல் விலைக்கு டீலரை அனுகுங்கள்.

1.0 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட அதிகபட்சமாக 67 HP பவர் மற்றும் 94 Nm டார்க்கை வழங்குகின்றது. இந்த மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5-ஸ்பீடு AMT கொண்டுள்ளது.

கூடுதலாக கிடைக்கின்ற சிஎன்ஜி மாடல் 56 hp பவர் மற்றும் 82.1Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கொண்டுள்ளது.

செலிரியோ மாடலுக்கு போட்டியாக வேகன் ஆர், ரெனால்ட் க்விட் , டாடா டியாகோ, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் உள்ளன.

Exit mobile version