Automobile Tamilan

இந்தியாவில் மாருதி சியாஸ் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அறிமுகம்

மாருதி சியாஸ் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி நிறுவனத்தின், 1.5 லிட்டர் பெற்ற புதிய மாருதி சியாஸ் கார் ரூபாய் 9.97 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 95 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் DDiS 225 என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 26.82 கிமீ என ஆராய் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள ஃபிநட் நிறுவன 1.3 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக புதிய நான்கு சிலிண்டர் டர்போ சார்ஜ்டு டீசல் என்ஜின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய என்ஜினில் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இட்பெறவில்லை.

மாருதியின் சியாஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்

இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாருதியின் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் இனி, தற்போது விற்பனையில் கிடைக்கின்ற 1.3 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாருதியின் மாடல்களுக்கு மாற்றாக விளங்க உள்ளது.

95 ஹெச்பி பவர் மற்றும் 225 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்ற 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெற்ற டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினை மாருதி சுசூகி நிறுவனம் DDiS 225 என்ற பெயரில் குறிப்பிடுகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஆராய் அமைப்பின் மைலேஜ் தொடர்பான சோதனையில் புதிய சியாஸ் கார் டீசல் மைலேஜ் லிட்டருக்கு 26.82 கிமீ ஆகும். விற்பனையில் கிடைக்கின்ற 1.3 லிட்டர் என்ஜினை விட 1.27 கிமீ குறைவாகும்.

சுசூகி நெக்ஸா ஷோரூம்களில் கிடைக்கின்ற சியாஸ் காரின் புதிய 1.5 லிட்டர் என்ஜின் விலை விற்பனையில் உள்ள மாடலை விட பேஸ் வேரியன்ட் ரூ.13,000 மற்றும் டாப் வேரியண்ட் ரூ.35,000 வரை அதிகரித்துள்ளது.

மாருதி சியாஸ் 1.5 லிட்டர் டீசல் கார் விலை பட்டியல்

மாருதி சியாஸ் டெல்டா – ரூ.9,97 லட்சம்

மாருதி சியாஸ் ஜெட்டா – ரூ. 11.08 லட்சம்

மாருதி சியாஸ் ஆல்பா – ரூ.11.37 லட்சம்

(விற்பனையக விலை டெல்லி)

Exit mobile version